For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பல்கலை.க்கு புதிய அந்தஸ்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாட்டிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்தை சென்னைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேர்வுக் கமிட்டி இந்த அந்தஸ்தைக்கொடுத்துள்ளது. நாட்டிலுள்ள 5 சிறந்த பல்கலைக்கழகங்களில் முதன்மையாக விளங்குகிறது சென்னைப்பல்கலைக்கழகம் என்று அக்கமிட்டி சர்டிபிகேட் அளித்துள்ளது.

இதே பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை பிரசிடென்சி கல்லூரி, சிறந்த அறிவியல் கல்லூரி என்றபெருமையைப் பெற்றுள்ளது.

கலை, அறிவியல், விளையாட்டு, கலாச்சாரம், உடற்பயிற்சி, மொழியியல், உடல்நலவியல் என்று அனைத்துத்துறைகளிலும் சென்னைப் பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது. இவை தவிர, அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளஆய்வு சம்பந்தமான படிப்புகளிலும் இந்தப் பல்கலைக்கழகம் சக்கைப் போடு போடுகிறதாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பல அரிய ஆய்வறிக்கைகளை எல்லாம் பொன்போலப் பாதுகாத்து வருகிறார்கள்,சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத் துறையினர். கணிதமேதை ராமானுஜத்தின் ஒரிஜினல்ஆய்வறிக்கைகள் மற்றும் ஏராளமான கலைப் புத்தகங்களும் இங்கு குவிந்து இருக்கின்றன. பிஎச்.டி.ஆய்வறிக்கைகள், குறிப்பேடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையே கிட்டத்தட்ட 5 லட்சத்து 10 ஆயிரமாம்.

இந்தப் பல்கலைக்கழகத்திற்கு யு.ஜி.சி. தரும் நிதி உதவியே, கல்வித் தரத்தில் சிறந்து விளங்குவதற்கு மிக முக்கியக்காரணமாகும். அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு ரூ.25 கோடி நிதி உதவி அளிக்கவிருக்கிறதாம் யு.ஜி.சி.

கிண்டி, சேப்பாக்கம், மெரினா, தரமணி என்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சென்னைப் பல்கலைக்கழகம்தன் எல்லைகளைப் பரப்பியுள்ளது. இவைதவிர, வேலூரிலும் ஒரு முதுகலைக் கல்வி மையத்தை வைத்துள்ளதுஇப்பல்கலைக்கழகம்.

பல்கலைக்கழக வளாகங்களில் மட்டும் 1,581 மாணவ மாணவிகள் தற்போது பயின்று வருகின்றனர். இதன்பல்வேறு துறைகளிலும் 208 பேராசிரியர்கள், 46 துணைப் பேராசிரியர்கள் மற்றும் 9 விரிவுரையாளர்கள்பணியாற்றி வருகின்றனர். மேலும், இப்பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சுமார் 100 கல்லூரிகளில் 5,000-க்கும்மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொன் கோதண்டராமன் கல்விப் பணியில் ஊறித் திளைத்தவர்.அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான நிதிகளுக்காக இப்போதே தயார் செய்து வருகிறார்.

உயிர்த் தொழில்நுட்பவியல், கடல் அறிவியல் ஆய்வு உட்பட பல துறைகளுக்குப் புதிய மையங்களைஏற்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் தற்போது பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது.

தங்கள் பல்கலைக்கழகத்திற்கு இவ்வளவு பெரிய அந்தஸ்து கிடைத்திருப்பதை எண்ணி எண்ணிஇப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைவருமே பூரித்துப் போயிருக்கிறார்களாம்!

ஆங்கிலவழிக் கல்லூரி ஒன்று வேண்டும் என்று, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய சென்னை மாகாணகவர்னர் லார்டு ஜான் எல்பின்ஸ்டோனிடம் 70,000 பேர் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். இதன் விளைவாக,1857ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தோன்றியதுதான் இந்தச் சென்னைப் பல்கலைக்கழகம்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X