தமிழக அரசு வக்கீலாக கோமதிநாயகம் நியமனம்
சென்னை:
தமிழக அரசின் வக்கீலாக நியமிக்கபட்ட கோமதிநாயகம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தில் சென்ற தி.மு.க ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றியபலரும் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பல புதிய வழக்கறிஞர்கள் அரசு வக்கீல்களாகநியமிக்கப்பட்டனர்.
முன்னதாக மாநில அரசு வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தததால் அந்தபதவிக்கு கோமதிநாயகம் நியமிக்கப்பட்டார்.
அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் பல சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலும் ஆஜராகியுள்ளார். சென்னை குடிநீர் வாரியம், வீட்டு வசதிவாரியம், குடிசை மாற்று வாரியம், கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளிலும் சட்டஆலோசராகபணியாற்றியுள்ளார்.
தடா மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டவழக்குகளிலும் இவர் ஆஜராகியுள்ளார். அல் உம்மா குண்டு வெடிப்புவழக்கிலும் இவர் ஆஜரானார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications