டான்சி வழக்கு: ஜெ. அப்பீலைத் தடை செய்ய சுவாமி மனு
சென்னை:
டான்சி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா அப்பீல் செய்த மனுவை விசாரிக்கத்தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் மனுவில் மேலும் கூறியிருப்பதாவது:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(3) பிரிவின்கீழ் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்ற ஜெயலலிதாவைமுதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் தமிழக ஆளுநர்.
டான்சி நிலம் தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளும், சசிஎன்டர்பிரைசஸ் வழக்கில் 2 ஆண்டுகளும் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இது தவிர பிளசன்ட் ஸ்டேவழக்கில் அவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த அனைத்து தண்டனைகளையும் எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அந்தவழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.
டான்சி நில ஊழலை முதலில் வெளிக் கொண்டு வந்தது நான்தான். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்ஜெயலலிதாதான். வழக்கைத் தொடுத்த அரசு நிர்வாக தலைமை பொறுப்பில் இவர்தான் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், இந்த அப்பீல் வழக்கை தமிழக அரசு நியாயமான முறையில் எதிர்கொள்ளும் என்றுஎதிர்பார்க்க முடியாது. அரசுத் தரப்பில் வேண்டுமென்றே வழக்கைச் சரியாக நடத்த மாட்டார்கள். இந்தக்குழப்பத்தில் நியாயம் கிடைக்காது.
ஜெயலலிதா முதல்வராகப் பதவி வகிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் விசாரித்துமுடியும் வரை, டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே அப்பீல் வழக்குகளை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார் சுவாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications