கருணாநிதி சொன்ன காக்கை மூப்பனார்தான்: வாழப்பாடி
சென்னை:
தன் பிறந்த நாளில் "காக்கைகள்" கலந்து கொள்ளவில்லை என்று மூப்பனாரைத்தான் கருணாநிதி குறிப்பிட்டதாகவாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஜெயலலிதா செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டுவோம். தவறு செய்தால் தட்டிக் கேட்போம்.
தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. இதுகுறித்து ஜூலை 15ம் தேதி விவாதிக்கப்படும்.
சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் மூப்பனார்கலந்து கொள்ளவில்லை. வீணாக ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை அவர்.
தன் பிறந்தநாளுக்கு மூப்பனார் வரவில்லை என்பதைத்தான் பிறந்தநாள் விழாவுக்கு காக்கைகள் வரவில்லை என்றுகருணாநிதி மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்
மூப்பனார் வைத்த விருந்தில் ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை. ராமதாஸை மக்கள் புறக்கணித்து விட்டனர்.அதனால் தான் அவர் அவமானத்தோடு விருந்துக்கு வரவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார். வெற்றி பெறும் போது மக்கள்தீர்ப்பு என்று கூறும் அவர், தோல்வி அடையும் போது மக்கள் தீர்ப்பை தூக்கியெறிந்து பேசுகிறார். இது அவரதுமனநோயாளித்தனமான மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின்போது கூட்டணி அமைப்பதில் ஸ்டாலின் கூறுவதைக் கேட்டு கூட்டணிஅமைத்தார் கருணாநிதி. அதனால் தான் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.
ஆனால் கருணாநிதியோ கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதால்தான் திமுக தோற்றது என்று கூறி வருகிறார்கருணாநிதி.
தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாமல் இருப்பதற்கான அனைத்து சூழ்ச்சிகளையும் செய்தவர் கருணாநிதி.தனக்கு எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாதே என்ற காரணத்தினால்தான் அவர்எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றார் என்றார் வாழப்பாடி.


Click it and Unblock the Notifications
