வீரப்பன் வேட்டையில் வெல்வாரா தேவாரம்?
கோவை:
காட்டுக்குள் வீரப்பன் நாடகத்தின் அடுத்த அத்தியாயம் துவங்குகிறது. இந்த முறை, கதாநாயகனாகப்பொறுபேற்றிருக்கும் தேவாரம், இம்முறை வில்லனை வெற்றி காண "சத்திய சோதனைகளில் இறங்க வேண்டியகட்டாயத்தில் உள்ளார்.
வீரப்பனைப் பிடிக்க தமிழக கர்நாடக கூட்டு அதிரடிப்படையின் தலைவர் தேவாரம் விரைவில் காட்டுக்குள்செல்கிறார்.
அவர் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் மேட்டுப்பாளையம் வழியாக வீரப்பனைத் தேடி காட்டுக்குள் செல்லலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு உறுதுணையாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஜி. விஜயகுமார் பண்ணாரி முகாமைப்பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தனமரக்கடத்தல், காட்டு விலங்குகளையும் யானைகளையும் வேட்டையாடிதந்தம் கடத்தல், அதிகாரிகளைக் கொலை செய்தல், முக்கியப் பிரமுகர்களைக் கடத்திச் செல்லுதல் உட்பட காட்டில்ஒரு "தர்பாரை நடத்தி வந்த வீரப்பன் இப்போது தனிக் காட்டு ராஜாவாக இருந்து வருகிறார்.
"மாயாவி வீரப்பன் என்ற பெயருக்குப் பொருத்தமாக, ஒட்டு மொத்த போலீசுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிவருகிறார் வீரப்பன். வீரப்பனைப் பிடிக்கும் நாடகம் ஒரு தொடர் கதையாகவே தொடர்கிறது.
நாட்டில் ஆட்சி மாறியதும் காட்டில் இப்போது காட்சியும் மாறுகிறது. வீரப்பனைப் பிடிப்பதற்கான அடுத்தஅத்தியாயம் துவங்கிவிட்டது. இந்த அத்தியாயத்திற்கு வால்டர் தேவாரம் புது கதாநாயகனாகிறார். ஆனால்,வீரப்பன் என்ற வில்லன் மட்டும் மாறவே இல்லை.
ஒவ்வொரு முறையும் வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்ற உத்வேகம், அவனது தலை வெளியே தெரியும்போதுமட்டுமே ஏற்படும். யாரையாவது கடத்திச் சென்று அரசின் கவனத்திற்கு வீரப்பன் வந்தால், அதிரடிப்படை முடுக்கிவிடப்படும். ஆனால், இப்போது வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே காட்டுக்குள்ளே அதிரடிப்படைசெல்கிறது.
அதே சமயம் வீரப்பனின் தலைக்கும் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோடி ரூபாய்கொடுத்தாலும் வீரப்பன் தலை கிடைக்காது என்ற நிலை இப்போதும் நீடித்து வருகிறது.
தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர், எல்லைப் பாதுகாப்பு படையினர், மத்திய பாதுகாப்பு படை என நவீனஆயுதங்களுடன் காட்டுக்குள் முகாம் இருந்தாலும், பரந்து விரிந்து கிடக்கும் காட்டில் எந்த இடத்தில் வீரப்பன்இருக்கிறார் என்பது சிம்மசொப்பனமாகவே இருந்து வருகிறது.
எனவே, புதிதாக அதிரடிப்படைக்கு ஐ.ஜியாகப் பொறுப்பேற்றிருக்கும் விஜயகுமார், புதிய கோணத்தில் சிந்திக்கத்தொடங்கியுள்ளார்.
முதலில் வீரப்பனுக்குச் செல்லும் உதவிகளைத் தடுத்தும் நிறுத்தும் பணியை மேற்கொள்வது என்ற முடிவைஎடுத்துள்ளார். வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு உணவு செல்லும் விதத்தைக் கண்டறிய தீவிரமுயற்சியில் இறங்கவுள்ளார்.
எப்போதும் வீரப்பனுக்குப் பக்கபலமாக இருப்பவர் சேத்துக்குளி கோவிந்தன் மட்டுமே. தற்போது வீரப்பனுடன்தமிழ் விடுதலைப் படை என்ற அமைப்பும் கைகோர்த்துக் கொண்டுள்ளது. இந்த தமிழ் தீவிரவாத அமைப்பிற்குகாட்டுக்குள் வாழ போதுமான வசதி இல்லாததால், இதன் முக்கியத் தலைகள் போலீசில் சிக்கிக் கொண்டனர்.
இன்னும் சில கூட்டாளிகள் வீரப்பனுடன் இருந்து வருகின்றனர். கடந்த முறை நடந்த வேட்டையில் வீரப்பனைத்தொட்டு விட்டோம் என அதிரடிப்படையினர் கூறினாலும், வீரப்பனைப் பற்றிய உண்மையான தகவல்கள் எதுவும்கிடைக்கவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications