இவ்வார இறுதியில் வீடு திரும்புகிறார் வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

பிரதமர் வாஜ்பாய் இந்த வார இறுதியிலோ அல்லது திங்கள்கிழமையோ வீடு திரும்புவார் என ப்ரீச் கேன்டிமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:

இந்த மாதம் 7ம் தேதி வாஜ்பாய்க்கு வலது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. வாஜ்பாய்க்குஇடதுகால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த அமெரிக்க டாக்டர் சித்தரஞ்சன் ரனவத்தான் இந்த மூட்டு மாற்றுஅறுவை சிகிச்சையையும் செய்தார்.

அறுவை சிகிச்சைக்குப்பின் வாஜ்பாயின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. ஜப்பானில் நடக்கும் மருத்துவக்கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக டாக்டர் சித்தரஞ்சன் ரனவத் புதன்கிழமை ஜப்பான் புறப்பட்டுச் செல்வதற்குமுன், வாஜ்பாயின் உடல்நிலை குறித்து திருப்தி தெரிவித்தார்.

ப்ரீச் கேன்டி மருத்துவமனையின் திட்டப் பொதுமேலாளர் சைரஸ் இஞ்சினியர் கூறுகையில், வாஜ்பாய் இந்த வாரஇறுதியிலோ அல்லது திங்கள்கிழமையோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். வாஜ்பாயின்உடல்நிலையை கண்காணித்து வரும் மருத்துவர்களும் அவரது உடல்நிலை குறித்து திருப்தி தெரிவிக்கின்றனர்என்றார்.

தற்போது ப்ரீச் கேன்டி மருத்துவமனையிலேயே பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால்மருத்துவமனையில் இருந்தபடியே வாஜ்பாய் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வகள் குறித்து அறிந்து கொள்கிறார்.பைல்களைப் படித்து கையெழுத்தும் போடுகிறார்.

இந்நிலையில், அமைச்சரவை செயலாளர் டி.ஆர். பிரசாத் புதன்கிழமை பிரதமரை சந்தித்து, அவருடன் அலுவலகவிஷயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+