For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரவுடி பங்க் குமாரை கைது செய்ய உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளராக செயல்பட்டு வரும் முன்னாள் ரவுடி "பங்க்" குமாரைக் கைது செய்துஆஜர்படுத்துமாறு சென்னை நகர கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த காண்டிராக்டர் தெய்வசிகாமணியை மிரட்டிய வழக்கில் சென்னை மேயர் மு.க. ஸ்டாலின்,முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன், முன்னாள் திமுக எம்.பி. பரசுராமன் மற்றும் "பங்க்" குமார் ஆகியோர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில் பரசுராமன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் மீது இதுவரை நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில்வந்தது. அப்போது பரசுராமன் சார்பில் ஆஜரான வக்கீல் எழுந்து, "பங்க்" குமார் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார் என்றார்.

இதையடுத்து, "பங்க்" குமாரை கைது செய்ய 20 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றார் அரசுத் தரப்பு வக்கீல்.ஆனால் அதை மறுத்த நீதிபதி அசோக் குமார், 20 நாட்கள் அவகாசம் தர முடியாது. ஜூன் 20ம் தேதிக்குள் "பங்க்"குமாரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

யார் இந்த "பங்க்" குமார்?

பங்க் குமார் ஒரு முன்னாள் ரவுடி. இவர் மீது பல வழக்குகள் சென்னை கோர்ட்டுகளில் உள்ளன. தேர்தல் சமயத்தில்பாமகவுக்கு ஆதரவாளராக இவர் மாறி விட்டார். சைதாப்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளராகப்போட்டியிட்ட பாஸ்கரனுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

சைதாப்பேட்டை பகுதியில் பிரமாண்டமான மாம்பழ கட்அவுட்களை வைத்து அசத்தினார். மாமல்லபுரத்தில்சமீபத்தில் நடந்த பாமக எம்எல்ஏக்கள் பாராட்டு விழாவிலும் "பங்க்" குமார் கலந்து கொண்டார். டாக்டர்ராமதாஸுக்கு பாடிகார்ட் போல அவர் அருகிலேயே இருந்தார்.

பாமக தலைவருக்கு நெருக்கமான நபராக மாறியுள்ள அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளதன் மூலம்பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X