ஆவின் பால் விலையை உயர்த்த பரிசீலனை: அமைச்சர் தகவல்
கோவை:
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ரூ.100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பால்விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என தமிழக பால்வளத் துறை அமைச்சர் சண்முகவேலுதெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஊழலற்ற நேர்மையான ஆட்சியை அமைக்கும் நோக்கில் எனக்கும் அமைச்சர் பதவியை அம்மா அளித்துள்ளார்.நான் பதவி ஏற்று 5 நாட்களில் குறைபாடுகளைக் களைய, ஆவின் நிர்வாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனைநடத்தியுள்ளேன். தவறுகள் நடக்கும் இடங்களில் களை எடுப்புகள் நடக்கும்.
இதுவரை பால் கொள்முதல் பட்டுவாடா செய்யப்படாத உற்பத்தியாளர்களுக்கு, 15 நாளில் பட்டுவாடாசெய்யப்படும். தனியார் நிறுவனங்கள் தரமற்ற பாலை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆவின் நிறுவனத்தில் நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தைத்தடுக்க பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். இந்த நஷ்டத்தை மானியத்தின் மூலம்சரிக்கட்டவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஆவின் கணக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை. தணிக்கை செய்ய உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்படும். பால்வளத்துறையில், முறைகேடுகளைக் களைந்து புதிய நிர்வாகத்தை செயல்படுத்தநடவடிக்கை எடுப்பேன் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications