பாகிஸ்தான்: பிரபாகரனின் நண்பர் தப்பினார்
கொழும்பு:
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய நண்பர் ஒருவர், பாகிஸ்தான்அதிகாரிகளிடமிருந்து தப்பினார்.
பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவராகக் கருதப்படும் குமரன் பத்மநாபன் எனப்படும் இவர்தான்,விடுதலைப்புலி அமைப்புக்கு கொரில்லா படையை உருவாக்கித் தருகிறார்.
அந்த வகையில், கொரில்லா படைக்கு ஆள் சேர்ப்பது சம்பந்தமாக, ஆப்கானிஸ்தான் கிளம்பினார் குமரன்.வழியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கும் சென்றார். அவரை அங்கே மடக்கிப் பிடிக்குமாறுஇலங்கையில் இருந்து தகவல் வந்தது. உடனே பாகிஸ்தான் அதிகாரிகள் பரபரப்படைந்தார்கள்.
ஆனால் அதிகாரியின் பிடியிலிருந்து தப்பிவிட்டார் குமரன். இவர் போலி பாஸ்போர்ட் மூலம் இஸ்லாமாபாத்சென்றதாகத் தெரிகிறது. இவருக்கு வேறு 5 பெயர்களும், 10க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளும் உள்ளன என்றுகொழும்பு புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜீவ் கொலை வழக்கு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்து, விடுதலையான 5 விடுதலைப்புலிகள்,தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்றனர்.
ஆதிரை, விக்கி, சண்முக வடிவேலு, ரூபன், கனகசபாபதி, சங்கர், ரங்கன் ஆகிய 7 விடுதலைப்புலிகளும் வெளிநாடுசெல்ல சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர்.
ஆனால் ரங்கனைத் தவிர மற்ற அனைவருக்கும் வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. அதன்படி,ஆதிரையும் அவருடைய கணவர் விக்கியும் கம்போடியா சென்றனர்.
சண்முக வடிவேலு மலேசியா சென்றார். தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார் ரூபன். கடைசியாக, கனகசபாபதியும்இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சங்கர் மட்டும் இன்னும் வெளிநாடு செல்லவில்லை. விரைவில் அவரும் செல்வார் என்று அவருடைய வக்கீல்தெரிவித்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications