For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுமையை ஒழிப்பதே எனது லட்சியம்: சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழ் நாட்டின் வறுமையை நீக்குவதே எனது லட்சியம் என கோவையில் ப.சிதம்பரம் பேசினார்.

கோவையில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டஅதன் நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பேசியதாவது:

நாணயங்கள் அச்சடிக்கும் நாணயச் சாலையில் இருந்து வரும் புதிய நாணயங்களைப் போன்ற இளைஞர்களைக்கொண்டு ஜனநாயகப் பேரவை உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பேரவையை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பேன். இதுவரை நியமித்துள்ள 5 மாவட்டங்களைச்சேர்ந்தர்வகளும் இளைஞர்கள் தான். இவர்களில் இருவர் பெண்கள்.

பதவிக்கு ஆசைப்படுவர்கள் நெறி பிறழாதவர்களாக இருக்க வேண்டும். பதவி ஆசை பிடித்தவர்களாக இருக்கக்கூடாது. பதவியைக் கேட்டுப் பெற வேண்டும். கேட்காமல் கொடுக்கப்படும் பதவியைப் பெற்றால், அதில் உழைப்புஇருக்காது.

பதவியைப் பெற்ற உடனேயே அலுவலகம் திறக்க வேண்டும். அதற்குப் பணக்காரர்கள்தான் வேண்டும் என்று நான்கூறவில்லை. எனக்குப் பணக்காரர்கள் வேண்டாம். தனிமரம் தோப்பாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

எனக்கு தோப்பு வேண்டும். திமுகவுடன் பாரதிய ஜனதாக் கட்சி கூட்டணி வைத்திருந்ததால் சிறுபான்மையினர்ஓட்டுப் போடத் தயங்கினர். எனவே, இந்தியப் பன்மையைப் பாதுகாக்கும் இயக்கமாக ஜனநாயகப் பேரவைசெயல்படும்.

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே 25 சதவீதம் பேர் உள்ளனர். பஞ்சாபில் 3 சதவீதம், ஆந்திராவில் 16சதவீதம், கேரளாவில் 12 சதவீதம் பேரும் உள்ளனர். தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.தமிழ்நாட்டில் வறுமையை ஒழிப்பதே எனது நோக்கமாகும் என்றார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X