நாளை டெல்லி திரும்புகிறார் வாஜ்பாய்
டெல்லி:
மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்தபின் அங்கு 12 நாட்களாக ஓய்வு எடுத்து வரும்பிரதமர் வாஜ்பாய் செவ்வாய்க்கிழமை பிற்பகல் டெல்லி திரும்புகிறார்.
இதுகுறித்து வாஜ்பாயின் உதவியாளர் நிருபர்களிடம் கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை டெல்லி திரும்பும் வாஜ்பாய் தனது வீட்டில் தொடர்ந்து 3 வாரங்கள் ஓய்வெடுப்பார். அப்போதுஅவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும்.
மனதளவில் பிரதமர் தேறிவிட்டாலும், அவருக்கு நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.அதனால் அவர் வீட்டில் ஓய்வெடுத்து விட்டு, உடல்நிலை நன்கு தேறியபின் அலுவலகத்துக்குச் செல்வார் என்றனர்.
முன்னதாக, பிரதமர் வாஜ்பாய்க்கு (76) கடந்த ஜூன் 7ம் தேதி வலது காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது. இதே போல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இடது காலில் அறுவை சிகிச்சை நடந்ததுகுறிப்பிடத்தக்கது.
மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பிரதமர் வாஜ்பாய் செவ்வாய்க்கிழமை டெல்லி திரும்புவாராஎன்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், அடுத்த ஆறு மாதங்கள் வரை பிரதமருக்குபிசியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
வாஜ்பாய் விரைவில் குணமடைய வேண்டுமானால் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று அவருக்குஅறுவை சிகிச்சை செய்த நியூயார்க்கைச் சேர்ந்த டாக்டர் சித்தரஞ்சன் தாஸ் கூறியுள்ளார்.
இருப்பினும், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப்பை சந்தித்துப் பேச வேண்டும் என்றும்,அதற்குள் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் பிரதமர் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை நடந்தபோது மிகவும் ஜாலியாக இருந்த பிரதமர் கடந்த 12 நாட்களாக ப்ரீச் கேன்டிமருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications