சுலோவேகியா: காணாமல் போன 17 இந்தியர்கள் ஆற்றில் மூழ்கி சாவு
டெல்லி:
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குச் செல்ல முயன்ற 17 இந்தியர்கள் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
சுலோவேகியா நாட்டிலிருந்து செக் குடியரசுக்கு மொராவா ஆற்றில் குதித்துத் தப்பிச் செல்ல முயன்ற போது,அவர்கள் அந்த ஆற்றில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பாகவே, வேறு 3 பேர் சுலோவேகியாபோலீஸாரிடம் பிடிபட்டனர்.
செக்கிலிருந்து முதலில் ஜெர்மனிக்கும், அப்புறம் இங்கிலாந்துக்கும் இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாகசெல்லவிருந்தார்கள் என்று பிடிபட்ட 3 பேரை விசாரித்தபோது தெரிய வந்தது. இந்த 3 பேரில் ஒருவர் இந்தியர்என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
சமீபகாலமாக, சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இவர்கள் அனைவரும் இங்கிலாந்தில் அடிமைகளாக வேலை பார்ப்பதற்காக விற்கப்படுகின்றனர்.
இவர்களை விற்பதற்கென்று ஒரு பெரிய கூட்டமே இங்கிலாந்தில் இயங்கி வருகிறது. ஒரு மனிதனுக்கு விலை ரூ.5லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் கடல் வழியாகத்தான் இந்த மனிதக்கடத்தல் நடைபெறுகிறது.
அவர்களால் இங்கிலாந்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சும்மாவா, சட்டவிரோதமாக அல்லவாவருகிறார்கள்? வழியிலேயே எதிர்பாராதவிதமாக பலரும் இறந்துவிடுவார்கள். அதே போல்தான், தற்போதும் 17இந்தியர்கள் மொராவா ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.
பெரும்பாலும் இந்தியாவின் பஞ்சாபிலிருந்தும் கேரளாவிலிருந்தும் வரும் மக்கள்தான் இங்கிலாந்தில்அடிமைகளாக விற்கப்படுகின்றனர். சில பேர் அமெரிக்காவுக்கும் விற்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.இந்தியாவில் வேலை கிடைக்காத காரணத்திற்காகவே, பெரும்பாலான இளைஞர்கள் இந்த மாதிரி அடிமைகளாகவெளிநாடுகளுக்கு ஓடுகின்றனர்.
இவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 2 டாலர்கள் வீதம் சம்பளம் கொடுக்கப்படுகின்றது என்றும் கூறப்படுகிறது.இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் டெல்லியில் உள்ள சில டிராவல்ஸ் நிறுவனங்களே, சமயங்களில்இதுபோன்ற ஏஜென்டுகளாகவும் செயல்படுகின்றனர் என்று டெல்லி போலீஸார் கூறினர்.
ஆனால், உரிய போலி ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படாததால், அவர்களைக் கைது செய்ய முடியவில்லைஎன்றும் டெல்லி போலீஸார் கூறினர்.
என்னதான் இவ்வளவு ஆபத்துக்கள் இருந்த போதிலும், மக்கள் சட்டவிரோதமாக கடல் வழியே ஊடுருவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியே விற்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications