முஷாரப் வருகை: போட்டி போடும் நட்சத்திர ஹோட்டல்கள்
டெல்லி:
உலகப் புகழ்வாய்ந்த காதல் சின்னம் தாஜ்மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா நகருக்கு வருகை தரவுள்ள முஷாரப்பை தங்கள்ஹோட்டலில் தங்க வைக்க 3 நட்சத்திர ஹோட்டல்கள் போட்டிபோடுகின்றன.
ஆக்ராவில் உள்ள முகுல் ஷெராட்டன், ஓபேராய் அமர் விலாஸ் மற்றும் ஜாய்ஃபி பேலஸ் ஆகிய 3 ஹோட்டல்களின்உரிமையாளர்கள், முஷாரபை தங்க வைக்க அனுமதி கேட்டுள்ளனர்.
இந்த 3 ஹோட்டல்களில் முஷாரப் எந்த ஹோட்டலில் தங்குவார் என்பது இன்னும் இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படும் என்றுஉத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் அசோக் யாதவ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஆக்ராவில் தங்கும் முஷாரப் முதலில் தாஜ்மஹாலைத்தான் சென்று பார்ப்பார். பின்னர் முக்கிய அரசியல்பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுவார் என்றார்.
ஆக்ராவில் உள்ள முகுல் ஷெராட்டன் ஹோட்டல் மேலாளர் அனுராக் சர்மா கூறுகையில், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்தங்குவதற்கு அனைத்து உயர்ரக வசதிகளும் எங்கள் ஹோட்டலில் உள்ளன.
அவர் அரசு மரியாதையுடன் தங்க வைப்பதற்கான அனைத்து வசதிகளும் எங்கள் ஹோட்டலில் இருக்கின்றன. கடந்த ஆண்டுமார்ச் மாதம் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் இந்திய வருகையின் போது அவரை எங்கள் ஹோட்டலில் தங்க வைக்கஏற்பாடுகள் செய்தோம். ஆனால் அவர் எங்கள் ஹோட்டலில் தங்கவில்லை என்றார்.
இந்த ஹோட்டலில் இரண்டு படுக்கையறை வசதி கொண்ட மெகா சைஸ் அறைகள் முஷாரப்புக்காக அலங்கரிக்கப்பட்டுவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறையிலும் இந்தியாவின் அழியாத சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதுதவிர அனைத்து அறைகளிலும்தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி வசதிகளும் உள்ளன.
இந்த ஹோட்டலில் சுல்தான் புருனே, இசையமைப்பாளர் யானி, குத்துச்சண்டை வீரர் முகமது அலி, இங்கிலாந்து இளவரசர்சார்லஸ், நெல்சன் மண்டேலா, பிரபல நடிகர் பீட்டார் ஓ டோலே மற்றும் மறைந்த ஜோர்டான் பேரரசர் ஆகியோர் தங்கியுள்ளனர்.
அடுத்ததாக சுமார் 175 சதுர கிலோமீட்டரில் தேக்குமர வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள ஹோட்டல் அமர் விலாஸ்பாகிஸ்தான் அதிபர் முஷாரபைத் தங்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது. இங்கு ஒரு நாள்இரவு தங்குவதற்கு மட்டும் ரூ 75, 000 கட்டணமாகும்.
மேலும் உத்தரப்பிரதேச அரசு செய்திக்குறிப்பில், முஷாரப் தங்கும் ஹோட்டலில் பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்படும். அமெரிக்கமுன்னாள் ஜனாதிபதி கிளின்டன் இந்தியா வந்திருந்த போது எவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டதோ அதேபோல் முஷாரப்தங்கவுள்ள ஹோட்டலிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications