திருமாவளவன் விடுதலை
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான முடக்கத்தான் பாண்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன் கொலைசெய்யப்பட்டதற்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என்று கோரி, கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும பந்த் நடத்துவதற்கு,விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த பந்த்தின்போது, வன்முறை நிகழும் என்று கருதிய போலீஸார், கடந்த வியாழக்கிழமை இரவே முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக, திருமாவளவன் கைது செய்யப்பட்டார். அவருடன் இவ்வமைப்பின் பல மாவட்ட நிர்வாகிகளும் கைதுசெய்யப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை நடந்த பந்த்திற்கும் தமிழகத்தில் அவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு, பல பஸ்களைச் சேதப்படுத்தினர்.
பாண்டிச்சேரியிலும் திங்கள்கிழமை இவ்வமைப்பினர் பந்த் நடத்தினர். இங்கும் பந்த்திற்கு அவ்வளவு ஆதரவு கிடைக்கவில்லை.கடைகள் திறந்திருந்தன. அலுவலகங்கள் இயங்கின. பேருந்துகளும் ஓடின. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து எந்த பஸ்ஸும்பாண்டிச்சேரிக்குச் செல்லவில்லை.
இருந்த போதிலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர், தமிழகத்தில் ஆங்காங்கேவன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
திங்கள்கிழமை விழுப்புரம்-சென்னை சாலையில் பஸ்களை எரித்தும், கல்வீசி எறிந்தும் சேதப்படுத்தினர். விருத்தாசலத்தில்,வன்முறையில் ஈடுபட்ட இந்த அமைப்பினரை நோக்கி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
திருமாவளவன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.அந்த வகையில், இவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.நல்லக்கண்ணு திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தார். அதிமுகவின் கூட்டணிக் கட்சி கம்யூனிஸ்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் திங்கள்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications