திருச்சியில் 13ம் நூற்றாண்டு பிரம்மன் சிலை கண்டெடுப்பு
திருச்சி:
திருச்சியில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பிரம்மன் சிலை நிலத்தடியில் கண்டெடுக்கப்பட்டது.
திருச்சியில் உள்ள சிந்தாமணி பகுதியில், வடக்கு ஆண்டார் கோவில் தெருவில் சாக்கடைப் பள்ளம் தோண்டிய போதுதான் இந்தச்சிலை கிடைத்தது. மேலும், இதே இடத்தில் ஒரு அம்மன் சிலையும் கிடைத்தது.
பட்டாடை உடுத்தி, 3 முகங்களுடன் உட்கார்ந்த நிலையில், சற்றே தேய்வுற்ற நிலையில் இருந்தார் பிரம்மன். பிற்காலச் சோழர்கள்காலமான 13ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பிரம்மன் சிலையின் உயரம் 3 அடி.
அம்மனோ, தன்னுடைய 2 கைகளிலும் தாமரை மொட்டுக்களை வைத்துக் கொண்டு, புதுப் பொலிவுடன் நின்று கொண்டிருந்தார்.சில நூறாண்டுகளுக்கு முன்னரே உருவானதாகச் சொல்லப்படும் இந்தச் சிலை, ஒன்றே முக்கால் அடி உயரம் கொண்டிருந்தது.
தற்போது இந்தச் சிலைகள் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டு, மக்களால் வணங்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications