"வெளிநாட்டு கருத்தடை மருந்துகளுக்குத் தடை வேண்டும்"
கோவை:
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட கருத்தடை மருந்துகளை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என இந்திய மாதர் தேசியசம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் பணியிடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகமாகி வருகிறது. விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய எந்தவழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. இதனை எந்த நிறுவனமும் செயல்படுத்தவில்லை. மேலும் இந்த வழிமுறைகள்குறித்த அறிவிப்பு ஒன்று, அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து வருகிறது. இந்த ஒதுக்கீட்டைக் குறைப்பதால்,அதிகம் பாதிக்கப்படுவர்கள் பெண்கள் தான். வெளிநாடுகளில், பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளை இந்தியாவிற்குள் கொண்டு வர தடை ஏற்படுத்த வேண்டும்.
அமைப்பு சாரா தொழில்களில், பெண்களுக்கான கூலி ரூ. 110 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 70 ரூபாய் மட்டுமேபெண்களுக்கு கிடைத்து வருகிறது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினரால் பலாத்காரம் செய்யப்பட்ட தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டியைச் சேர்ந்த நாகமணி என்ற பெண்ணிற்குஇதுவரை இழப்பீடு கொடுக்கப்படவில்லை. எனவே, இந்தப் பெண்ணிற்கு இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கவேண்டும்.
ஆதி திராவிடப் பெண்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தையும், தொட்டில் குழந்தை திட்டத்தை மீண்டும்அமல்படுத்துவதையும் வரவேற்கிறோம். இதற்காக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பார்லிமென்டில் மகளிர் மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனக் கோரி, வரும் ஜூலை 16ம் தேதி முதல் 23 ம்தேதி வரை போராட்டம் நடத்துவோம்.
ஜூலை 23ம் தேதி சென்னையில் சட்டசபை மற்றும் தமிழக மாவட்டங்களின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications