வந்துவிட்டன மலிவு விலை சீனப் பொருட்கள்
கோவை:
சீனாவிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் சாதனங்கள் கோவை வரவுள்ளன.
இவை மலிவு விலையில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சீனாவிலிருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் மலிவான விலையில் வந்து குவியப் போகின்றன என்ற வதந்தி, கடந்த6 மாத காலமாக தமிழகத்தையே உலுக்கி வந்தது. இப்போது சீனாப் பொருட்கள் வந்துவிட்டதற்கு அறிகுறி தெரியஆரம்பித்துள்ளது
இந்தப் பொருட்களை மொத்தமாக சப்ளை செய்வதற்காக, குத்தகைக்கு எடுத்துள்ள கோவையைச் சேர்ந்தடி.ஆர்.எஸ். நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொன்கா என்ற எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சீனத் தயாரிப்புகளை விற்பனை செய்ய, தமிழகத்தின் மொத்தவிநியோகஸ்தராக தேவராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சப் டீலர்களாக 22 பேர் தமிழகம்முழுவதிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொச்சி துறைமுகத்தில் ஒரு கப்பலில் சீனப் பொருட்கள் உள்ளன. அங்கு தொழிலாளர்கள் ஸ்டிரைக்நடப்பதால், அவை அங்கேயே முடங்கியுள்ளன. விரைவில் அவை விற்பனைக்கு வரும். இந்தக் கப்பலில் ரூ.5கோடி மதிப்புள்ள சீனப் பொருட்கள் வந்துள்ளன.
இந்தப் பொருட்களில், சாதாரண கலர் டி.வி. முதல் உயர் தரமான டி.வி. வரை கிடைக்கும். இவற்றின் விலை ரூ.6ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை இருக்கும். மேலும், 100 சிசி திறனுடைய 2 சக்கர வாகனங்கள் ரூ.20ஆயிரத்துக்கும், கம்ப்யூட்டர் மானிட்டர் ரூ.3,750க்கும், முழுக் கம்ப்யூட்டர் ரூ.12 ஆயிரத்துக்கும் கிடைக்கும்.
இது தவிர, ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள கார்களும் விற்பனைக்கு வரவுள்ளன. செல்போன் ரூ.2,500க்கும்,பொம்மைகள் மலிவான விலையிலும் கிடைக்கும் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications