தமிழக காங்கிரஸ் தலைமை மாறுமா?
சென்னை:
தமிழக காங்கிரஸில் ஏற்பட்டுள்ள கடுமையான கோஷ்டிப் பூசல் காரணமாக, விரைவில் அக்கட்சியின் தலைவர்இளங்கோவன் மாற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம், முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம்,தற்போதைய எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.பிக்கள் அடைக்கலராஜ், அன்பரசு ஆகியோர்எப்படியாவது இளங்கோவனை மாற்றியே தீரவேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.
இதற்காக, தங்களுடைய முதற்கட்ட நடவடிக்கையை ஏற்கனவே அவர்கள் துவங்கி விட்டனர். இளங்கோவனின்எதிர்ப்பாளர்கள் என்று கூறப்படும் இவர்கள், திருச்சியில் இவரைத் தூக்குவதற்கான ஆலோசனைக் கூட்டத்தைநடத்தி முடித்துவிட்டனர்.
அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் சென்னையில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். அநேகமாகஜூலை 1ம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
1967ல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இந்த 34 ஆண்டுக் காலத்தில் சுமார் 10 தலைவர்களைப்பெற்றுள்ளது, தமிழக காங்கிரஸ் கட்சி. கடந்த ஒரு வருடமாகத் தலைவராக இருந்து வருகிறார் இளங்கோவன்.
ஆனால், கடந்த மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, இளங்கோவனை மாற்றியே தீர வேண்டும் என்றுஒரு கோஷ்டி தலைகீழாக நின்று கொண்டு போராட ஆரம்பித்து விட்டது.
இளங்கோவனை காங்கிரஸ் தலைமையிலிருந்து நீக்க வேண்டும் திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியகையோடு, டெல்லிக்குச் சென்று சோனியா காந்தியிடமும் ஒரு மனுவைக் கொடுத்துள்ளது இந்தக் கோஷ்டி.
இதற்கிடையே தமிழக காங்கிரஸும், தமிழ் மாநில காங்கிரஸும் இணையும் வைபவமும் விரைவில் நடைபெறும்என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை த.மா.காவின்தலைவர் மூப்பனார் ஏற்றால் மட்டுமே, அக்கட்சியில் நீடித்துவரும் கோஷ்டிப் பூசல்கள் நீங்கும் என்று சில அரசியல்நோக்கர்கள் கூறுகிறார்கள்.
ஜூலை 15ம் தேதி நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் விழாவிற்காக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி தமிழகத்திற்கு வரவிருக்கிறார். அப்போது, த.மா.கா. தலைவர் மூப்பனாரையும் வரவழைத்து,அவரை சோனியாவுடன் பேச வைத்து, இந்த 2 கட்சிகளின் இணைப்பு பற்றி முடிவெடுப்பதற்கு தமிழக காங்கிரஸ்தயாராகி வருகிறது.
ஆனால், தற்போது அமெரிக்காவில் பயணம் செய்துவரும் சோனியா காந்தி, இந்தியா திரும்பிய பிறகுதான் எந்தமுடிவும் தெரிய வரும்.
தன்னுடைய பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், இந்த எதிர்ப்புக் கோஷ்டியினரைப் பற்றிப் புகார்கூறுவதற்காகவும், சோனியாவின் வருகையை எதிர்பார்த்து, டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார் இளங்கோவன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications