கோவை அருகே யானைகள் அட்டகாசம்
கோவை:
கோவை அருகே உள்ள கிராமத்தில் மீண்டும் யானைகள் அட்டகாசம் தொடங்கியுள்ளது. இது குறித்து மலையோரப் பகுதிகளில்வாழும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை அருகே உள்ள ஆனைகட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இதனைவிரட்ட வனத்துறையினர் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர்.
சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் உரிய குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் யானைகளுக்கு கிடைத்து வந்தன. இதனால்,கடந்த சில நாட்களாக யானைகள் தொந்தரவு எதுவும் இல்லை.
ஆனால். இப்போது மீண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், யானைகள் மீண்டும் காட்டிலிருந்து தரைப் பகுதிக்குப் படையெடுக்கத்தொடங்கி விட்டன.
12 யானைகள் மற்றும் 3 குட்டி யானைகள் கொண்ட ஒரு கூட்டம் தரைப்பகுதிக்கு வந்தது. இங்கு விவசாய நிலங்களைத் துவம்சம்செய்து, தண்ணீர் அருந்தி விட்டுச் சென்று விட்டன.
இவற்றை விரட்ட, பொதுமக்கள் ராக்கெட் மற்றும் பட்டாசு ரக வெடிகுண்டுகளை வீசி யானைகளை விரட்ட முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
வீரப்பன் தேடுதல் வேட்டை காட்டுக்குள் நடப்பதால், யானைகளும் இடம் மாறி வந்திருக்கலாம் என வனத் துறையினர் கருத்துதெரிவித்துள்ளனர். இந்தக் காட்டு யானைகள் ஊருக்குள்ளும் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், இது குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications