தலித்துக்களுக்கு எதிரானது ஜெ.அரசு: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்றுக் கொண்டது முதல் தலித் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று விடுதலைசிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலித்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

மதுரையில் முடக்கத்தான் பாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், வந்தவாசியில் அம்பேத்கர் சிலைக்கு பாமகவினர் செருப்புமாலை அணிவித்தது மற்றும் சேரியில் வாழும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களைக் கண்டும்காணாததுபோல் இருக்கிறது அதிமுக அரசு.

தென் மாவட்டங்களில் மட்டுமின்றி வட மாவட்டங்களிலும் தலித்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு.

மதுரையில் கள்ளச்சாராயம், கந்துவட்டி மற்றும் கட்டப்பஞ்சாயத்து ஆகிய சம்பவங்கள் தலைவிரித்தாடுகிறது.

முடக்கத்தான் பாண்டி கொலை குறித்து விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவேன்.

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கிருஷ்ணா நதிநீர் கொண்டு வரப்படவில்லை. ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கால்வாயேவெட்டப்படவில்லை என்று புகார் கூறினார் ஜெயலலிதா.

இப்போது கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளார். அவர் வெட்டப்படாத கால்வாய் மூலம் கிருஷ்ணாநதிநீரைக் கொண்டு வருவாரா அல்லது லாரிகள் மூலம் கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வருவாரா என்பது குறித்துத் தெளிவாகவிளக்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+