பாண்டிச்சேரியில் பந்த்
Subscribe to Oneindia Tamil
புதுவை:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக புதுவையில் முழு அடைப்புகடைபிடிக்கப்படுகிறது.
புதுவை முன்னாள் முதல்வரும், திமுக அமைப்பாளருமான ஜானகி ராமன் தலைமையில் முழு அடைப்பு கடைபிடிக்கப்படுகிறது.
முழு அடைப்பையொட்டி புதுவையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் எதுவும் ஓடவில்லை.
சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் பாண்டிச்சேரி முழுவதும்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி-விழுப்புரம் ரயிலை மறிக்க முயன்ற முன்னாள் முதல்வர் ஜானகிராமன், திமுக பிரமுகர்கள் சிவா, கென்னடி,எஸ்.பி.சிவகுமார், திருநாவுக்கரசு எம்.பி. ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications