போலீசாரால் அடித்துச் இழுத்துச் செல்லப்பட்ட கருணாநிதி
சென்னை:
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வீட்டிலிருந்து அடித்து இழுத்துச்செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மைலாப்பூர் ஆலிவர் ரோட்டில் உள்ள ராஜாத்தி அம்மாளின் இல்லத்திலில் தூங்கிக் கொண்டிருந்த அவரைநள்ளிரவு 2.15 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் எழுப்பினர்.
அவரை கைது செய்வதாகக் கூறி இழுத்தனர். போலீசாரிடம் அவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தபோதே அவரைபோலீசார் கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தனர்.
இதைத் தடுக்க வந்த மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி மாறனை போலீசார் தூக்கிஏறிந்தனர்.
கருணாநிதி கைது செய்யப்படுவதைத் தடுக்க முயன்ற அவரது குடும்பத்தினரை போலீசார் முரட்டுத்தனமாகஅப்புறப்படுத்தினர்.
பின்னர் கருணாநிதியை அடித்தனர். பின்னர் அவரை கையை, காலை பிடித்து அடித்துக் கொண்டே இழுத்துச்சென்றனர். போலீசாரின் பிடியிலிருந்து விலக முயன்ற கருணாநிதியை போலீசார் மிக மிக முரட்டுத்தனமாகநடத்தினர்.
அவரது வயதையும் கூட மதிக்காமல் போலீசார் மிக கடுமையாக அவரிடம் நடந்து கொண்டனர்.
வீட்டிலிருந்து இழுத்துவரப்பட்ட கருணாநிதியை அம்பாசிடர் காரில் ஏற்றினர். அவருடன் காரில் ஏற முயன்றமுரசொலி மாறனை குண்டுகட்டாகத் தூக்கி வெளியில் எறிந்தனர். அவர் வேஷ்டி அவிந்த நிலையில் வெளியில்விழுந்தார்.
அதே போல கட்சியின் முக்கியத் தலைவரான டி.ஆர். பாலுவுக்கும் போலீசார் மிகக் கடுமையாகத் தாக்கிர். இதில்அவர் மயங்கி விழுந்தார்.
பலத்த பாதுகாப்பு:
வீட்டிலிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்குக் கருணாநிதிகொண்டு செல்லப்பட்டார்.
அந்த அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. யாரையும் கருணாநிதியைச் சந்திக்கஅனுமதிக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டார் கருணாநிதி.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications