கருணாநிதி கைதுக்கு மூப்பனார் கண்டனம்
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) கட்சித் தலைவர் ஜி.கே. மூப்பனார்கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மூப்பனார் கூறியிருப்பதாவது:
நள்ளிரவுக்கு மேல் தூங்கிக் கொண்டிருந்த ஒரு முன்னாள் முதல்வரை, கதவை உடைத்துத் தட்டி எழுப்பிக் கைது செய்திருப்பதுகண்டனத்திற்கு உரியது.
அதைவிட, அவரைப் போலீஸார் கைது செய்தவிதம் அதைவிடக் கடும் கண்டனத்திற்குரியது என்று மூப்பனார் கூறியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் ஆட்சியிலுள்ள அதிமுகவின் கூட்டணிக் கட்சியில் த.மா.காவும் அங்கம் வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 3ம் தேதி தன்னுடைய பிறந்தநாள் விழாவின்போது, "சென்ற பிறந்த நாளின் போது வந்த சில காக்கைக் கூட்டங்கள்இந்தப் பிறந்த நாளுக்கு வரவில்லை" என்று கருணாநிதி கூறியிருந்தார். மூப்பனாரைத்தான் "காக்கைக் கூட்டம்" என்று கருணாநிதிகுறிப்பிட்டார் என்று அதற்கப்புறம் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications