அடுத்தகட்ட நடவடிக்கை: நாளை மீண்டும் கூடுகிறது மத்திய அமைச்சரவை
டெல்லி:
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை பதவி நீக்கம்செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
மீண்டும் திங்கள்கிழமையும் பிரதமர் வாஜ்பாய் தமைையில் மத்திய அமைச்சரவை கூடும் என மத்திய சட்டத்துறை அமைச்சர்அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவரைகைது செய்த போது அவரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது நாடு முழுவதையும் கடும் அதிர்ச்சிக்குஉள்ளாக்கியது.
இது குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை பிரதமர் வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை பாத்திமா பீவி அறிக்கை அனுப்பி வைத்தார். அதில் ஜெயலலிதாவையும், கருணாநிதி கைதுசெய்யப்பட்ட போது போலீசார் நடந்து கொண்ட விதத்தையும் ஆதரித்து இருந்தார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்லநிலையில் இருப்பதாக கூறியிருந்தார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை கூடிய மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழக ஆளுனர் பாத்திமபீவியின் அறிக்கை தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலையை சரியாக எடுத்துக் கூறவில்லை என கருதப்பட்டது. இதையடுத்துபாத்திமா பீவியை பதவி நீக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
பாத்திமா பீவியை பதவிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி மேலும் கூறுகையில், மத்தியஉள்துறை சிறப்புச் செயலாளர் கவுஷல் தலைமையில் சென்றுள்ள குழு கைது செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களை சந்தித்தபின் டெல்லி வருவார்கள். அவர்கள் அறிக்கை ஒன்றை சமர்பிப்பார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தமிழக நிலையை நேரில் சென்று ஆராய சென்னைசென்றுள்ளார். அவரது அறிக்கையும் பெறப்படும்.
இந்த இரண்டு அறிக்கைகளும் பெறப்பட்ட பின் திங்கள்கிழமை மீண்டும் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும். அப்போதுதமிழக நிலை குறித்து விவாதிக்கப்படும். மேலும் அடுத்து அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும்விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும என்றார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்












Click it and Unblock the Notifications