கருணாநிதியிடம் போலீஸ் அடாவடி: கர்நாட முதல்வர் கண்டனம்
பெங்களூர்:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட விதம் மிகவும் தவறானது என்று கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பாத்திமா பீவியை மத்திய அரசு பதவி நீக்கம் செய்தது குறித்து கருத்துக் கூற கிருஷ்ணா மறுத்து விட்டார்.
திங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கிருஷ்ணா கூறும்போது:
தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பாத்திமா பீவியிடம் மத்திய அரசு என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. அவரைஆளுநர் பதவியிலிருந்து நீக்கியது குறித்து நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை.
மேலும், பாத்திமா பீவி ஏன் நடந்த சம்பவங்கள் குறித்து உண்மையான தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லைஎன்றும் தெரியவில்லை.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பது குறித்து நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை.
கருணாநிதியைப் போலீஸார் கைது செய்யும்போது நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது. கண்டிக்கத்தக்கது. அவரைப்போலீஸார் இவ்வளவு கீழ்த்தரமாக நடத்தியிருக்கக் கூடாது. ஒரு முன்னாள் முதல்வரைக் கைது செய்யும் போது, நேரமும், விதமும்கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.
தமிழகத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அவரை நள்ளிரவில் கைது செய்திருக்க வேண்டாம். போலீஸார் கைதுசெய்து விடுவார்களோ என்ற பயத்தில் அவர் பயந்து ஓடி ஒளிய மாட்டார்.
இது பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் நடத்தப்பட்ட அநாகரீகமான செயலா என்பது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லைஎன்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications