இலங்கையில் ஜெ. கொடும்பாவி எரிப்பு
கொழும்பு:
இலங்கைத் தமிழர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பி, அவருடைய கொடும்பாவியையும் ஞாயிற்றுக்கிழமைஎரித்தனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையிலும் எதிரொலித்துள்ளது. கருணாநிதி அநாகரிகமாகக் கைதுசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட இலங்கைத் தமிழர்கள், கொதித்து எழுந்துள்ளனர்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள வவுனியாவில், 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒன்றாகக் கூடினர்.பின்னர், அவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமும்சென்றனர். கருணாநிதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோஷங்களும் இவற்றில் அடக்கம்.
பிறகு அனைவரும் சேர்ந்து, ஜெயலலிதாவின் உருவ பொம்மையைக் கொளுத்தி எரித்தனர்.
தற்போது சிறிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ள "டெலோ" என்ற தமிழீழ விடுதலை இயக்கம்தான் இந்தப் போராட்டத்திற்குஅழைப்பு விடுத்திருந்தது.
இந்த "டெலோ" இயக்கத்தினர், முன்பொரு காலத்தில் தீவிரவாதிகளாக இருந்தனர். 1980களில் தமிழ்நாட்டில் கூட தங்களுடையதீவிரவாத முகாம்களை அமைத்திருந்தனர்.
இலங்கைத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கருணாநிதிக்காக, தற்போது இவர்கள் குரல் கொடுக்கத்துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்ததக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications