போலீசாருக்கு நீதிபதி மிகக் கடும் கண்டனம்-
சென்னை:
கருணாநிதி, ஸ்டாலின் கைதாகக் காரணமான சென்னை பாலங்கள் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைதிங்கள்கிழமை தொடங்கியது.
இந்த வழக்கு விசாரணை சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 10 பாலங்கள் கட்டப்பட்டதில்ரூ. 12 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஊழல் தொடர்பாக 14 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக கருணநிதியும்,இரண்டாவது குற்றவாளியாக ஸ்டாலினும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இந்தவழக்கில் கைதாகியுள்ள போக்குவரத்துத்துறை அதிகாரி மனு தாக்கல் செய்தார். இவரது மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் போலீசாரையும் மாநகராட்சிக் கமிஷ்னர் ஆச்சார்யலுவையும் நீதிபதி மிகக் கடுமையாக கண்டித்தார்.
கருணாநிதியை கைது செய்தவுடன் என்னிடம் ஆஜர்படுத்தினீர்கள். நான் அவரை மருத்துவ பரிசோதனைசெய்துவிட்டு மத்திய சிறைக்குக் கொண்டு செல்லும்படி கூறினேன். ஆனால், நீங்கள் (போலீசார்) அவரை மருத்துவசோதனை செய்யாமலேயே ஜெயிலில் அடைத்துள்ளீர்கள்.
அதே போல இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்டாலினை எதற்காக மதுரை சிறைக்குக் கொண்டு சென்றீர்கள்?அவரை சென்னை சிறையில் தான் வைத்திருக்க வேண்டும்? என கேள்விகளால் நீதிபதி துளைத்தெடுத்தார்.
நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் போலீசாரும், ஊழல் தொடர்பாக போலீசிடம் புகார் கொடுத்தமாநகராட்சி ஆணையர் ஆச்சர்யலுவும் திணறினர்.
கருணாநிதியை மத்திய சிறை வாசலில் ஒரு பிச்சைக்காரரைப் போல உட்கார வைத்திருந்தீர்கள். உங்கள் (போலீஸ்)இதயம் தசைகளால் ஆனதா, இல்லை களிமண்ணால் ஆனதா என மிகக் கடுமையாக நீதிபதி கேட்க சப்தநாடியும்ஒடுங்கிப் போய் நின்றிருந்தனர் போலீசார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications