பாத்திமா பீவியிடம் விசாரணை நடத்த நெடுமாறன் கோரிக்கை
சேலம்:
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவியின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சேலத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அட்டர்னி ஜெனலரையும், குடியரசுத் தலைவரையும் ஆலோசனை செய்யாமல் ஜெயலலிதாவிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தவர் பாத்திமா பீவி. அவருடைய நடவடிக்கைகளையும் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொண்டால் பலஉண்மைகள் வெளி வரும்.
ராஜீவ் காந்தி கொலைவழக்கு:
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நான்கு பேருக்கு கருணை மனு அனுப்பினோம். ஆனால், அவை எல்லாம்நிராகரிக்கப்பட்டன என கூறி விட்டார். பின்னர் மாநில அமைச்சரவை பரிந்துரைக்காமல் இவ்வாறு நிராகரிக்க ஆளுநருக்குஅதிகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியல் சட்டத்தை அவர் மதித்து நடக்காதவர் என்பதற்கு இந்த ஒருசம்பவமே முன்னுதாரணம்.
கருணாநிதியைக் கைது செய்ததில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அரசியல்சட்டத்தை மீறி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, மனித உரிமைகளை மீறி நடந்து கொண்ட அத்தனை போலீஸ் அதிகாரிகளையும்பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
2 மத்திய அமைச்சர்களைக் கைது செய்து வழக்குப் போட்டிருப்பது இதுவரை எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று. மத்தியஅமைச்சர்கள் மீது குறைகள், குற்றங்கள் இருக்குமானால், குடியரசுத் தலைவரிடமும், பிரதமரிடமும் முறையிட்டு பரிகாரம்காண்பது தான் சரியான தீர்வு.
இதை இப்படியே தொடர விட்டால், எல்லா மாநிலங்களிலும் மத்திய அமைச்சர்களுக்கு இவ்வளவு தான் மரியாதை கிடைக்கும்.
கடந்த காலங்களில் பொதுமக்களிடம் போலீசார் நடந்து கொண்ட விதம் இப்படித் தான் உள்ளது. போலீசாரின் பல அத்துமீறல்கள், இப்போது கருணாநிதியின் கைது சம்பவம் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இவ்வாறு நெடுமாறன் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications