ஜெ. வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, முந்தைய ஆட்சிக் காலத்தில் செய்த ஊழல்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள்விரைவில் சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. இப்போது இந்த வழக்குகள் தனி நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தனி நீதிமன்றங்கள் ஜெயலலிதா அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுபவை. எனவே இவற்றை சி.பி.ஐ.நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி திமுக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திமுகவின் கோரிக்கையை ஏன் நாங்கள் ஏற்கக் கூடாது? என ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளது.

முன்னதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா ஆட்சி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், தற்போதுஜெயலலிதா நடத்தி வரும் அரசு காபந்து அரசுதான். இன்னும் அவர் எம்.எல்.ஏவாகக் கூட ஆகவில்லை.இந்நிலையில் அரசியல்வாதிகள் மீதும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யும் போதும்,அவர்களைக் கைது செய்யும் போதும் கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா என்று கடும் கோபத்துடன்கேட்டுள்ளார்கள் பல உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

கட்சிகளுக்கிடையே மோதல்கள் இருந்தாலும், அது வரைமுறைக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும். வரைமுறைமீறினால் அந்த அரசு சரியாகச் செயல்பட முடியாது. கோபத்தைக் கட்டுப்படுத்தவும் ஜெயலலிதா கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூட ஒரு நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

"அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரம், மக்களின் நலனைக் கவனிக்கத்தானே தவிர, அரசியல் எதிரிகளைப்பழிவாங்குவதற்காக அல்ல. ஜனநாயகத்தில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்கே இடமில்லை. இதை மோதல்மனப்பாங்கோடு நாங்கள் கூறவில்லை" என்கிறார்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உயர் நீதிமன்றத்தில்தான் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளன. அதுவும், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதால்மட்டுமே, அந்த வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே அவர் இந்தவழக்கிலிருந்து தப்பித்து விட்டதாக நினைக்க முடியாது.

இந்நிலையில், ஜெயலலிதா தற்போது முதல்வராக இருக்கும் காரணத்தாலேயே, தற்போது தனி நீதிமன்றத்தில் உள்ளஅவர் சம்பந்தப்பட்ட வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றுகருதுகிறார் திமுக தலைவர் கருணாநிதி.

இதையடுத்து திமுக எம்.பி. குப்புசாமி இந்த வழக்குகளை உடனடியாக மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.க்கு)மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே. ஜெயின், தனி நீதிமன்றத்தில் உள்ளவழக்குகளை ஏன் சி.பி.ஐ.க்கு மாற்றக் கூடாது என்பதற்கு இன்னும் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றுஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குப்புசாமி கோரியபடி மட்டும், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட தனி நீதிமன்ற வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டால்,ஜெயலலிதாவுக்கு எதிரான சட்ட சிக்கல்கள் மேலும் அதிகமாகும் என்றே கூறப்படுகிறது.

ஏனென்றால், முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ. இருக்கிறது. மத்தியில் வாஜ்பாய்பிரதமராக இருக்கிறார். பாஜகவின் கூட்டணியில் திமுக இருக்கிறது. ஜெயலலிதாவின் முக்கிய எதிரி திமுக தலைவர்கருணாநிதி. கூட்டிக் கழித்துப் பார்த்தால், சி.பி.ஐ.யிடம் ஜெயலலிதா வழக்குகள் மாட்டும்போது, அவை என்னகதிக்கு உள்ளாகும் என்று சொல்லவே தேவையில்லை.

தன் அரசை விட்டு, தனி நீதிமன்ற வழக்குகளை சி.பி.ஐ.க்கு அனுப்புவதற்கு ஜெயலலிதா நிறைய யோசிக்கத்தான்செய்வார். ஆனால், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால் வேறு வழியும் இல்லை. வழக்குகளை சி.பி.ஐயிடம்மாற்றித்தான் ஆகவேண்டும்.

இல்லாவிட்டால், உயர் நீதிமன்றமே இவ்விஷயத்தில் தலையிட்டு, சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றிவிடும் என்றுகூறப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+