இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 30 கோடி ஹெராயின் பறிமுதல்
நாகர்கோவில்:
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 30.2 கோடி மதிப்புள்ள போதைப் பொருளான ஹெராயின்கைப்பற்றப்பட்டது.
திருநெல்வேலி அருகே தாளையூத்து பகுதியில் ஒரு வேனில் இந்த ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை போதைப் பொருள் கடத்தப்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நாகர்கோவில்போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் உஷாராயினர்.
மதுரை-திருநெல்வேலி சாலையில் தாளையூத்து அருகே போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனையில்ஈடுபட்டனர். வேகமாக சென்ற ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 30 பிளாஸ்டிக் பாக்கெட்களில்இருந்த ஹெராயின் பிடிபட்டது.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் 1 கிலோ எடையுள்ள ஹெராயின் இருந்தது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் எடை31.615 கிலோவாகும்.
இதையடுத்து வேனில் இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்த போதைப் பொருள்கடத்தல் கும்பலுக்கு பல சர்வதேச தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த போதைப் பொருள் உவரி கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்தது.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!