கருணாநிதி கைது: நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது சம்பவம் குறித்து நீதி விசாரணை செய்யுமாறுதமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த ஜூன் 30ம் தேதி இவர்கள் கைது செய்யப்பட்ட போது, போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டார்களாஎன்பதைக் கண்டறிவதற்காக ஒரு நபர் விசாரணைக் கமிஷன் போடப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ. ராமன் இந்த விசாரணையை நடத்துவார்.
கருணாநிதி, முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகு, நீதிமன்றக் காவலுக்குஅனுப்பப்படும் வரையில் போலீஸார் வரம்புமீறி நடந்து கொண்டார்களா என்பது குறித்து விசாரணைமேற்கொள்ளப்படும்.
மத்திய அமைச்சர்களை ஏன் கைது செய்ய நேர்ந்தது என்பது தொடர்பான சம்பவங்கள் குறித்தும் விசாரணைநடத்தப்படும்.
போலீஸ் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த விசாரணைக் கமிஷனே பரிந்துரை செய்யும்.
அதே நேரத்தில், நடந்த சம்பவங்களின்போது, போலீஸார் தாக்கப்பட்டார்களா என்பது குறித்தும்உண்மையிலேயே அவர்கள் சட்டபூர்வமாக தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுக்கப்பட்டார்களா என்பதுபற்றியும் விசாரணைக் கமிஷன் விசாரிக்கும்.
அடுத்த 3 மாதங்களுக்குள் தன்னுடைய விசாரணை அறிக்கையைத் தமிழக அரசிடம் இந்த விசாரணைக் கமிஷன்ஒப்படைக்கும்.
"டான்சி", "கலர் டிவி" வழக்குகளை விசாரித்தவர்:
இந்த நீதி விசாரணையை மேற்கொள்ளவிருக்கும் நீதிபதி ராமன், முன்னர் தனி நீதிமன்றத்தில் "டான்சி ஊழல்"மற்றும் "கலர் டிவி ஊழல்" வழக்குகளை விசாரித்தவர். இந்த வழக்குகளில், குற்றப்பத்திரிகை நகல்களைத் தமிழில்மொழி பெயர்த்துக் கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா கோரியதை ஏற்று, அதற்குஉத்தரவிட்டவர் இந்த ராமன்.
கடந்த 1999ல் ஓய்வு பெற்றார் நீதிபதி ராமன்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications