கருணாநிதி ஒரு சிறந்த நடிகர் என்கிறார் தம்பிதுரை
டெல்லி:
கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்களை வைத்து, கருணாநிதி ஒரு பெரும் நாடகத்தையே நடத்தி, தான் ஒருநல்ல நடிகர் என்று நிரூபித்துள்ளார் கருணாநிதி என்றார் தமிழகக் கல்வி அமைச்சர் தம்பிதுரை.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திரை உலகத்தில் கருணாநிதி திரைக்கதை-வசனம் எழுதிய பல படங்கள் வெற்றிகளைக் குவித்துள்ளன. தற்போதுஅவர் தன்னுடைய வாழ்க்கையிலும் நடிப்பை அரங்கேற்றியுள்ளார்.
அவரைக் கைது செய்வதற்காகப் போலீஸார் சென்றபோது, முதலில் நன்றாகத்தான் ஒத்துழைத்தார். இடையில்,உடை மாற்றிக் கொண்டு வருவதற்காகப் போனார் பாருங்கள். அப்போதுதான், அவருடைய அரங்கேற்றம்ஆரம்பமானது.
உடை மாற்றச் சென்ற அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் முரசொலி மாறனுக்கும், திமுகவின் சொந்த டி.வியான சன்டி.விக்கும் செல் மூலம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, நல்ல பிள்ளை மாதிரி வெளியே வந்தார். அதற்குஅப்புறம்தான் அவருடைய உண்மையான நடிப்பே ஆரம்பித்தது.
சிறையில் அவருக்கு உடம்பு சரியில்லை. அவரை இப்படியே சிறையில் கொன்று விடுவார்கள் என்றெல்லாம்கூறினார்கள். ஆனால் நடந்தது என்ன? சிறையில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே, பத்திரிகையாளர்கூட்டத்தைக் கூட்டிய கருணாநிதி, ஒரு மணி நேரம் இடைவிடாது பேட்டி கொடுத்துள்ளார். எப்படி?
உடல்நிலை சரியில்லாத ஒருவர் எப்படி தொடர்ந்து ஒரு மணி நேரம் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார்என்பதிலிருந்தே அவருடைய நடிப்பை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.
கருணாநிதியைக் கைது செய்ய ஏன் இரவில் சென்றீர்கள் என்று எல்லோருமே கேட்கிறார்கள். இரவிலேயே இப்படிநடிப்பவர், பகலில் எந்த அளவிற்கு நடித்திருப்பார் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
ஏதோ செய்யப் போய், ஏதேதோ நடந்து விட்டது. இது எங்களுக்குத் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள அடிதான்.திமுகவினரும் ஏதோ பெரிய வெற்றி கிடைத்துவிட்டதாகக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள்மீண்டும் எழுந்திருப்போம் என்று கூறினார் தம்பிதுரை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications