பாரிஸை கலக்கிய ஜெகன்னாதர் தேர் திருவிழா
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டின் சாடிலெட் மாகாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை குட்டி இந்தியாவாகவே மாறிவிட்டிருந்தது.இங்கு நடந்த பூரி ஜெகன்னாதர் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்று சிறப்பு செய்தனர்.
பந்தல் அமைத்து பஜனை பாடல்கள் ஒரு புறம், மறு புறம் சுடச்சுட இந்திய பலகாரங்கள், மற்றொரு பகுதியில்குஜராத்தின் கைவினை பொருட்கள் என அந்தப் பகுதியே இந்தியா ஆகிப் போயிருந்தது.
ஏறக்குறைய 3,000 பேர் இந்தத் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாமற்றும் மொரீசியஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.
தேர்திருவிழா பிரான்சிற்கான இந்திய தூதர் கன்வால் சிபல் தலைமையில் டி லா ரிபப்ளிக் என்ற இடத்தில் இருந்துதுவங்கியது. இந்தத் திருவிழாவில் பிரான்சிற்கான நேபாள தூதர், பிரான்சிற்கான மொரீசியஸ் தூதர் மற்றும்யுனெஸ்கோவிற்கான இந்திய தூதர் நீலம் சபர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆண்களும் பெண்களும் 20 மீட்டர் நீளம் கொண்ட தேர் வடத்தை பிடித்து தேரை இழுத்து சென்றனர். இந்த தேர்பாரிசின் முக்கிய வீதிகளை எல்லாம் வலம் வந்தது. 6 கிலோமீட்டர் தூரம் வலம் வந்த தேர் பாரிசின் சாட்லெட்லெஸ் ஹாலேஸ் மாவட்டத்தில் வந்து நிலை கொண்டது.
இந்த தேர் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இருக்கும் பூரி ஜெகன்நாதர் கோவிலில் இருக்கும் தேரைப் போலவேவடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரிசா ஜகன்நாதர் கோவிலில் கடந்த வாரம்தான் தேர் திருவிழா நடந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
தேர் வலம் வந்தபோது, தேருக்கு முன் பக்திப் பாடல்களை ஒரு குழு பாடிக் கொண்டு சென்றது. தேரின் மீதுபக்தர்கள் பூக்களை தூவிய வண்ணம் வந்தனர். தேர் ஊர்வலத்துடன் சில பக்தர்கள் நடனமாடியபடி வந்தனர். சிலர்குஜாராத்தின் கிராமிய நடனமான கார்பா நடனத்தை நடனமாடியபடி வந்தனர்.
பிரான்சில் உள்ள இஸ்கான் அமைப்பும் இந்த விழாவின் விழாக்குழுவில் அங்கம் வகித்தது. இஸ்கான் அமைப்புபிரான்சில் சில கோவில்களை நிர்மாணித்து, நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்கான் நிர்மாணித்து நடத்தி வரும் கோவில்கள் பாரிசின் முக்கிய பகுதிகளில் உள்ளன. இங்கு இந்துபண்டிகைகைள் எல்லாம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இதனால் இவை இந்து பண்டிகைகள்கொண்டாடப்படும் மையம் போல் திகழ்கின்றன.
தேர் இரவு 7 மணிக்கு நிலைக்கு வந்ததும் அங்கு குழுமியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம்வழங்கப்பட்டது. சுமார் 5,000 பக்தர்கள் அங்கு குழுமியிருந்தனர்.
தேர் கிளம்பிய போது எதிர்பார்த்ததை விட குறைவான பக்தர்கள்தான் தேரை இழுக்க வந்திருந்தனர். ஆனால் தேர்பல வீதிகளையும் கடந்து வந்த போது பக்தர்கள் கூட்டம் அதிகமாகி, அவர்களும் தேருடன் வரத் தொடங்கினர்.
நாடு கடந்து வாழும் இந்தியர்களும் ஒரு நாஸ்டால்ஜிக் டச் கொடுத்தது இந்த விழா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications