லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை முடிந்தது... ஸ்டாலின் மீண்டும் கைதாவாரா?
சென்னை:
ஸ்டாலின் மேயராக இருக்கும் சென்னை மாநகராட்சியில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து லஞ்சஒழிப்புத் துறையின் முதல் கட்ட விசாரணை முடிந்துவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக விரைவில் ஸ்டாலின்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சென்னை மாநகராட்சி மேற்கொண்ட பல திட்டங்களில் பெரும் அளவில் முறைகேடுகளும் ஊழல்களும்நடந்துள்ளதாக மாநகராட்சி எதிர்க் கட்சிகளான அதிமுகவும் தமிழ் மாநில காங்கிரசும் புகார் கூறி வந்தன.
மாநகராட்சின் எதிர்க் கட்சித் தலைவர் வெற்றிவேல், அதிமுகவின் அவைத் தலைவர் கராத்தே தியாகராஜன்ஆகியோர் இது தொடர்பாக அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியையும் முதல்வர் கருணாநிதியையும் சந்தித்துபுகார் மனு கொடுத்தனர்.
இந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா இது குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாநகராட்சியின் திட்டங்கள் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
ஸ்டாலின் மீதான புகார் பட்டியல்:
லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஸ்டாலின் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் விவரம்:
சென்னையில் திமுக ஆட்சி காலத்தில் ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட 10 மேம்பாலங்களில் பல கோடி ஊழல்நடந்துள்ளது.
சென்னை முழுவதும் குடிநீர்க் குழாய்களை சரி செய்வதாகக் கூறி சாலைகளைத் தோண்டவும் அதை மூடவும்செய்யப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ள செலவில் முறைகேடு நடந்துள்ளது. இதில் மட்டும் 150 கோடி அளவுக்குஊழல் நடந்துள்ளது.
நேப்பியர் பாலத்தை சரி செய்வதாகக் கூறி செய்த செலவில் ரூ. 40 லட்சம் ஊழல் நடந்துள்ளது.
பிராட்வேயில் வெளிமாநில பஸ்கள் நிறுத்தம் கட்டுவதில் மாபெரும் அளவில் ஊழல். இது போன்ற பல புகார்கள்கூறப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வழக்குகளைப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணையை மிக வேகமாக நடந்திவந்தனர். இப்போது முதல் கட்ட விசாரணை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இன்னொரு கைதுப் படலம் துவங்கலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications