நீதிபதி அசோக் குமாரின் விசாரணையை முடக்க முயற்சி
சென்னை:
கருணாநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு, கைது செய்யப்பட்ட விதம், பின்னர் போலீசார் நடந்து கொண்டவிதம்ஆகியவை குறித்து தமிழக அரசை கேள்விகளால் குடைந்த நீதிபதி அசோக் குமார் மீதே ஒரு வழக்கு போட்டுள்ளதுதமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.
இது தவிர அதிமுக வழக்கறிஞர் ஒருவரும் நீதிபதிக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆனால், இவரது மனுஇன்னும் ஏற்கப்படவில்லை. இந்த மனு ஏற்கப்படவும் மாட்டாது எனத் தெரிகிறது. செசன்ஸ் கோர்ட் நீதிபதியானஅசோக் குமாருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கருணாநிதியை இவரது வீட்டில் தான் நள்ளிரவில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளியது போலீஸ். அப்போதுகருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதை போலீஸ் புறக்கணித்தது. அதேபோல ஸ்டாலினை சென்னை சிறையில் வைக்க உத்தரவிட்டார். அதையும் போலீஸ் புறக்கணித்தது.
பின்னர் இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தபோது போலீசாரையும் தமிழக அரசையும்ஒரு வாங்கு வாங்கினார் அசோக் குமார். இந்த வழக்கே ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறிய அவர்போலீசாரின் நடவடிக்கைள் மிகத் தவறானவை என்றார்.
இந் நிலையில் தான் சி.பி.சி.ஐ.டி. (கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த பிரிவினர்) போலீஸ் சார்பிலும் அதிமுகவழக்கறிஞர் கந்தசாமி என்பவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள விவரம்:
நீதிபதி அசோக் குமாார் தனது வரம்பையும் மீறி போலீசார் மீதும் அரசு மீதும் கண்டனம் தெரிவித்துள்ளார்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யலாமா அல்லது காவலில் வைக்கலாமா என்று மட்டும் தான்நீதிபதி முடிவு செய்யலாம். அதை விட்டுவிட்டு வழக்கின் தகுதி குறித்தே அவர் விவாதிக்க வேண்டிய அவசியம்இல்லை.
இந்த வழக்கில் புகார் கொடுத்த மாநகராட்சி அதிகாரியையும் விசாரணை செய்து வரும் போலீஸ் அதிகாரியையும்நீதிபதி விசாரித்தது தேவையில்லாதது. இதற்காக நீதிபதி தவறான, சட்ட விரோதமான முறைகளைக்கையாண்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும்போது அரசுத் தரப்புக்கு நீதிபதி உரிய கால அவகாசம்தரவில்லை. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள (கருணாநிதி, ஸ்டாலின் உள்பட) இந்த மேம்பால ஊழலால் பெற்றலாபம் என்ன என்பது குறித்தும் நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். இது தேவையில்லாதது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளது தவறு.
எனவே இந்த வழக்கில் அவர் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக வழக்கறிஞர் வழக்கு:
கிட்டத்தட்ட இதே போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி நீதிபதி அசோக் குமார் மீது அதிமுக வழக்கறிஞர் கந்தசாமிஎன்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஆனால், இந்த மனு இன்னும் ஏற்கப்படவில்லை.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications