அழுகும் பிணங்கள்: நாறுகிறது அரசு மருத்துவமனை
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனை மார்ச்சுவரியில் உள்ள ஏ.சி. சாதனம் செயல்படாததால், பிணங்களைக்"காப்பதற்கு" வசதி இல்லாமல் போய்விட்டது.
சுமார் 40 ஆண்டுகளாக, மார்ச்சுவரிக்கு வரும் பிணங்களை நாறவிடாமல் தடுத்து வந்த அந்த ஏ.சி. சாதனம், கடந்தசில வருடங்களாகவே "நோயில்" விழுந்தது. இடையிடையே அதற்கு "மருந்து, மாத்திரைகள்" கொடுத்து"உயிரளித்து" வந்தார்கள்.
ஏ.சி. சாதனம் செயல்படவில்லை என்றால் வேறு என்ன ஆகும்? அங்கிருந்த பிணங்கள் எல்லாம் நாற ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் பிணங்களைப் பாதுகாப்பது ரொம்பவும் கஷ்டம் என்று மருத்துவமனை நிர்வாகம்நினைத்தது.
போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட 2 பிணங்கள், மருத்துவமனை வளாகத்துக்குள்ளாகவே வெட்டவெளியில்எறியப்பட்டுள்ளன. யார் இதை வெளியில் எறிந்தது என்றும் தெரியவில்லை.
வழக்கமாக, போஸ்ட்மார்ட்டம் செய்த பின்னர், பிணங்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக ஒரு வாரம் வரைமார்ச்சுவரியில் பிணங்கள் கிடத்தப்பட்டிருக்கும். அதற்கப்புறம் அப்பிணங்கள் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம்போலீஸாரால் ஒப்படைக்கப்படும்.
சில சமயங்களில், அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத பிணங்களை, குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர்போலீஸாரே எரித்து அல்லது புதைத்து விடுவார்கள்.
ஜூன் 27ம் தேதி ஏ.சி. சாதனம் செயல்படாமல் போனதை அடுத்து, இங்கு வந்து குவியத் தொடங்கிய பிணங்களை,சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கும் அனுப்பிக்கொண்டிருந்தனர்.
தற்போது, இதிலும் சிக்கல் வந்து விட்டது. பிணங்களை எடுத்துக் கொண்டு அங்கு போனால், "ஸாரி, இங்கேஏற்கனவே ஹவுஸ்ஃபுல்" என்று கூறி அவர்கள் பிணங்களைத் திருப்பி அனுப்பிவிட ஆரம்பித்துள்ளனர்.
இதனால், பிணங்களை என்ன செய்வது என்று முழி முழி என்று முழித்துக் கொண்டிருக்கிறது சென்னை அரசுப்பொது மருத்துவமனை நிர்வாகம். போலீஸார் தரும் பிணங்களையும் ஏற்பதற்கு, மருத்துவமனை மறுத்து வருகிறது.இதனால், போலீஸாரும் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தனிக் கதை.
மறைந்து போன அந்த உயிர்களுக்கு வாழும் காலத்தில் இந்த உலகம் தந்த கஷ்டத்தைவிட இறந்து பிறகு அரசு தரும்இந்தக் கஷ்டம் மிக அதிகமானது. உயிர்களுக்கும் உடல்களுக்கும் ஒரு கிழிந்த கட்சிக் கொடிக்குக் கிடைக்கும்மரியாதை கூட கிடைக்காமல் போவது சாபம் தான்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications