என்னைக் கொல்ல சதி நடந்தது: கருணாநிதி புகார்
சென்னை
கடந்த ஜூன் 30 ம் தேதி தான் கைது செய்யப்பட்ட போது, தன்னை வேலூர் சிறையில் தள்ளி கொலை செய்யத்திட்டமிடப்பட்டிருந்ததாக அதிமுக அரசின் மீது கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டின் 2 பெருங்கட்சிகளாகிய அதிமுகவும் திமுகவும் ஒன்றின் மேல்ஒன்று குற்றம் சாட்டி அறிக்கைப் போர் நடத்தி வருகின்றன.
இந் நிலையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
நான் கைது செய்யப்பட்ட ஜூன் 30 ம் தேதி இரவு 3 மணி வரை தனியாக உட்கார வைத்து விட்டார்கள்.எனக்கு ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தபோதும், மருத்துவர்களை வற்புறுத்தி நான் நலமாக இருப்பதாகச்சொல்ல வைத்தார்கள்.
பிறகு வேலூர் கொண்டு செல்லும் வழியில் என் கார் மீது மற்றொரு வாகனத்தை மோத வைத்து என்னைக்கொள்ளத் திட்டமிட்டார்கள்.
நான் கைது செய்யப்பட்ட விதம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ராமன் நல்லவர் தான். ஆனால் அவரது தீர்ப்புஆளுங்கட்சியின் தீர்ப்பாகத்தான் இருக்கும்.
கடந்த 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்புச்சம்பவத்தைப் பற்றி விசாரிக்க நான் அமைத்தநீதிபதி கோபாலகிருஷ்ணன் கமிஷன் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று ஜெயலலிதா அறிவிக்கவில்லையா?.அதுபோல இந்தக் கமிஷனின் தீர்ப்பை ஏற்பதும் ஏற்காததும் அரசியல் கட்சிகளின் விருப்பம் தான்.
நான் கைது செய்யப்பட்டபோது மத்திய அமைச்சர்களான மாறனும் பாலுவும் போலீசாரைத் தடுக்கவே இல்லை.அவர்களை ஜெயலலிதா சொல்வது போல மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டிய அவசியமும் இல்லை.
நான் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் எடுத்த வீடியோவை கேபிள் டிவிக்களில் காட்ட ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அமல்படுத்தும் பொறுப்பு மாவட்டக் கலெக்டர்களுக்கு தரப்பட்டுள்ளது.நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க எனது கைது சம்பவத்தை கேபிள் டி.வியில் காட்டச் செய்வதுதான்கலெக்டர்களின் வேலையா?
என்னைப் போல ஜோதிபாசுவைக் கைது செய்திருந்தால் கம்யூனிஸ்ட்காரர்கள், வெறும் கண்டன அறிக்கைவிட்டதோடு சும்மா இருந்திருப்பார்களா?
இவ்வாறு கருணாநிதி கூறினார்
யு.என.ஐ
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications