• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியலில் சிவாஜி

By Staff
|

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு சிவாஜியைக் கொண்டு வந்தவரும் பேரறிஞர் அண்ணா தான். 1952ம் ஆண்டில்ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தயாரித்த பராசக்தி படத்தின் மூலம் சிவாஜி கணேசனை சினிமாவில் அறிமுகம்செய்ய வைத்தார்.

இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் கலைஞர் கருணாநிதி. கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களுக்கு தனதுநடிப்பின் மூலம் உயிர் கொடுத்தார் சிவாஜி கணேசன்.

இதற்கு முன் 1949ம் ஆண்டில் அண்ணா துவக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்திலும் தீவிர உறுப்பினரானார்சிவாஜி. திமுகவின் பிரச்சார பீரங்கியாகவும் உருவெடுத்திருந்தார். திமுகவின் கடவுள் எதிர்ப்புக் கொள்கைகளைப்பரப்பி வந்தார்.

ஆனால், திடீரென திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி கோவிலுக்கு சிவாஜி சென்று வர அதைப் பெரிதுபடுத்தியதுதிமுக. அவருக்கு கட்சியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து தீவிர திமுகவினர் சிவாஜியின் காரின் மீதும்போஸ்டர்கள் மீதும் மாட்டு சாணத்தை வீசினர். தொடர்ந்து கட்சியில் ஓரம் கட்டப்பட்டார் சிவாஜி.

1953ம் ஆண்டில் புயல் நிவாரணத்துக்காக திமுக நிதி திரட்டியபோது, துண்டை ஏந்தி பராசக்தி வசனங்களை பொதுமக்களிடம் பேசி 12,000 ரூபாய் திரட்டிக் கொடுத்தார் சிவாஜி. அப்போது 12,000 ரூபாய் என்பது மிகப் பெரியபணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நிதியை அரசிடம் அளிக்கும் விழாவுக்கு கூட சிவாஜியை திமுகஅழைக்கவில்லை.

எம்.ஜி.ஆருக்குத் தான் கட்சியில் முக்கியத்துவம் தர ஆரம்பித்தனர். தன்னை ஒதுக்கிவிட்டு எம்.ஜி.ஆரை திமுகதூக்கிவிட ஆரம்பித்ததால் வெறுத்துப் போயிருந்தார் சிவாஜி. அப்போது தான் ஈ.வி.கே. சம்பத் ஆரம்பித்த தமிழ்தேசியக் கட்சியில் சேர்ந்தார்.

பின்னர் அங்கிருந்தும் விலகி 1955ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசின் மிகப் பெரியதலைவராக இருந்த காமராஜரின் அன்பைப் பெற்றார். திமுகவுக்குப் போட்டியாக காமராஜருடன் இணைந்துகாங்கிரஸ் பொதுக் கூட்டங்களை நடத்தினார். தனது ரசிகர் மன்றத்தை காங்கிரஸ் கட்சியின் பணிகளில்ஈடுபடுத்தினர்.

1969ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி உடைந்தபோது காமராஜருடன் உறுதியாக நின்றார். 1975ம் ஆண்டில் காமராஜர்இறந்த பின்னர் இந்திரா காந்தி தலைமையில் பிளவுபட்ட இரு காங்கிரஸ் கட்சிகளும் ஒன்றாக இணைந்தபோதுதானும் ஒன்றுபட்ட காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

பிரதமர் இந்திரா காந்தியை தீவிரமாக ஆதரித்தார். இந்திராவும் மிகவும் மதிக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவராகசிவாஜியையும் வைத்திருந்தார். ஆனால், காலத்தின் கட்டாயத்தால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கவேண்டிய நிலைக்கு இந்திரா காந்தி தள்ளப்பட, அதை சிவாஜி கடுமையாக எதிர்த்தார். ஆனாலும் கட்சியில்குழிதோண்டும் வேலை எதையும் செய்யாமல், இந்திராவின் கட்டளையை ஏற்று பிரச்சாரம் செய்தார்.

சிவாஜியின் தொண்டை பாராட்டிய இந்திரா காந்தி அவரை ராஜ்யசபா எம்.பியாக்கினார்.

ஆனால், இந்திராவின் மரணத்துக்குப் பின் ராஜிவ் காந்தியின் கட்டுப்பாட்டில் வந்தது காங்கிரஸ். 1984ம் ஆண்டுநடந்த சட்டசபைத் தேர்தலில் சிவாஜியின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கட்சியில் ஒதுக்கப்பட்டனர்.

சிவாஜிக்கும் காங்கிரஸ் கட்சியில் உரிய மரியாதை தரப்படவில்லை. இதனால், அரசியலில் இருந்து ஒதுங்கியேஇருந்தார்.

எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைய, ஜானகி அணிக்குதனது ஆதரவைத் தெரிவித்தார் சிவாஜி. 1989ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக முன்னேற்றமுன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார்.

இவரது கட்சிக்கு 55 சீட்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், 234 இடங்களில் போட்டியிட்ட ஜானகி-சிவாஜி அணியேஒரே ஒரு இடத்தில் தான் வென்றது. தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் போட்டியிட்ட சிவாஜிக்குக் கூடடெபாசிட் கிடைக்கவில்லை. ஜானகி தனது கணவரின் கோட்டையான ஆண்டிப்பட்டியில் தோற்றார்.

இந்த மாபெரும் தோல்விக்குப் பின்னர் அரசியலைவிட்டே விலகி விட்டார் சிவாஜி.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X