சுடுகாட்டு கூரை ஊழல்: ஆச்சார்யலுவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் தொடர்புடைய சென்னை மாநகராட்சி கமிஷனர்ஆச்சார்யலு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அப்போதைய ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்தவரும், தற்போதைய சென்னைமாநகராட்சி கமிஷனருமான ஆச்சார்யலு மற்றும் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிஆகியோருக்கு அதில் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது இந்த வழக்கு தொடர்பாகஆச்சார்யலுவும், செல்வகணபதியும் அடுத்த மாதம் 13ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்குநோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சி.பி.ஐ. ஜுலை மாதம் 13ம் தேதி சதித்திட்டம், ஏமாற்றுதல் மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ. கூறியிருப்பதாவது:
முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நாகப்பட்டினத்தில் இருக்கும் 95 சுடுகாடுகளுக்குகூரை அமைத்ததில் ரூ 23 லட்சம் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. ஒவ்வொருசுடுகாட்டுக்கும் கூரை அமைக்க ரூ 30,000 செலவிடப்பட்டதாக பொய்க் கணக்குகாட்டப்பட்டு உள்ளது என்று கூறியிருந்தது.
சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதிஃப்ரெட்ரிக் கனகராஜ் ஆச்சார்யலுவுக்கும், செல்வ கணபதிக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
அடுத்த மாதம் 13ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் எம். சத்தியமூர்த்தி.அப்போதைய நாகப்பட்டின ஊரகவளர்ச்சித்துறை திட்ட அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,கருங்குளத்தைச் சேர்ந்த கூட்டுறவு தச்சுச் தொழிலாளர்கள் சங்க சிறப்பு அதிகாரிஆரோக்கியராஜ் மற்றும் கான்ட்ராக்டர் பாரதி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுஉள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி. சென்னை நகர மேயர் ஆகியோர் சென்னையில்மேம்பாலம் கட்டியதில் ரூ. 12 கோடி அளவிற்கு ஊழல் செய்ததாக குற்றம் சாட்டி அவர்கள்கைதுக்கு வழி வகுத்தவர் ஆச்சார்யலு என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications