இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கினார் நடிகர் விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் விஜயகாந்த் சென்னை அருகே இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றைத் தொடங்கினார்.
இக்கல்லூரியின் நிறுவனராக விஜயகாந்தும், தலைவராக அவரது மனைவி பிரேமலதாவும், தாளளராக அவரதுமைத்துனர் சுதீசும் இருப்பார்கள்.
இது குறித்து விஜயகாந்த் கூறியதாவது:
நான் படிக்காதவன். மற்றவர்களாவது படிக்கட்டும் என்று தான் ஆண்டு தோறும் ஏழை மாணவர்களுக்கு என்னால்முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்.
இதையடுத்து, கல்விக்காக செலவிடுவதை விட கல்வியை கற்றுக் கொடுக்க செலவிடலாம் என்று முடிவு செய்தேன்.அதனால் இந்தப் பொறியியல் கல்லூரியைத் தொடங்கி இருக்கிறேன்.
இங்கு, கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் உட்பட 4 பாடப் பிரிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளனஎன்று விஜயகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications