For Quick Alerts
For Daily Alerts
உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பா.ஜ.க. கோரிக்கை
திருச்சி:
உள்ளாட்சித் தேர்தல்களை முன்பே திட்டமிட்டபடி அதிமுக அரசு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிஎம்.எல்.ஏவான ராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியது.
ஆனால் சமீப காலமாக அது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதாஎன்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
மேலும் உள்ளாட்சி மன்றம் இயங்கினால்தான் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்பதை அரசுஉணரவேண்டும் என்றார் ராஜா.
பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் சேர்த்துக் கொள்ளப் பட்டது குறித்துக் கேட்டதற்கு, கட்சி மேலிடம் எடுக்கும்முடிவையே தானும் ஏற்பதாக அவர் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!