வாஜ்பாய் மீது கூட்டணித் தலைவர்கள் முழு நம்பிக்கை: ஆனால், சிவசேனை....??
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் பதவி விலகக் கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள்கூறியுள்ளன.
ஆனால், இந்தக் கூட்டத்தை சிவசேனைக் கட்சி புறக்கணித்துவிட்டது. யூ.டி.ஐ. ஊழலில்பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியது சிவசேனை தான்என்பது குறிப்பிடத்தக்கது.
சிவசேனை கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்ஜய் நிருபம் யு.டி.ஐயின் யு.எஸ் -64பங்குகள் விவகாரத்தில் பிரதமர் அலுவகத்தில் உள்ள அதிகாரியான என்.கே.சிங்குக்கும் தொடர்பு இருக்கிறது என்று ராஜ்யசபாவில் செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.
இதனால் மனமுடைந்த பிரதமர் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்வதாகபாரதிய ஜனதா கூட்டத்தில் அறிவித்தார். கூட்டணியில் அங்கம் வகித்த கட்சியே தன்மீது குற்றம் சுமத்தியதால் பிரதமர் மனமுடைந்து இந்த முடிவை எடுத்தார்.
இதை அடுத்து பிரதமரின் முடிவு குறித்து விவாதிக்க புதன்கிழமை காலை பிரதமர்இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் கூடியது. இந்த கூட்டம் 1 மணிநேரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வாஜ்பாய் தலைமையில் முழு நம்பிக்கை இருப்பதாக கூட்டணிகட்சியினர் கருத்துத் தெரிவித்தனர். தனது பதவி விலகும் எண்ணத்தை வாஜ்பாய்கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர்ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், வாஜ்பாய்தான் ஒரே தலைவர். வேறு தலைவர்என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இந்த கமிட்டியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முரசொலி மாறன்,தே.ஜ.க ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அஜீத் சேத்தி, பா.ஜ.கவின் மூத்ததலைவர் சிக்கந்தர்பக்த் ஆகியோர் கொண்ட 4 பேர் இடம் பெற்றிருப்பார்கள் என்றார்..
இந்த கூட்டத்தில் சிவசேனா கட்சியின் சார்பில் யாரும் இடம் பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications