மேம்பால ஊழல் வழக்கு: உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் பதில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேம்பால ஊழல் வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்தை மறுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகரமேயர் மு.க. ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டபோக்குவரத்து நிபுணர் சீனிவாசன் ஜாமீன் விசாரணையின் போது, விசாரணை காவல்துறை அதிகாரியிடம்சென்னை முதன்மை செஷன்சு நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் விசாரணை நடத்தினார்.

மு.க.ஸ்டாலினின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி அரசு தரப்பு வக்கீலிடம் பல்வேறுசந்தேகங்களைக் கேட்டார். பின்னர் பல கருத்துக்களை குறிப்பிட்டு ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், நீதிபதி அசோக்குமார் வழங்கிய தீர்ப்பில் உள்ள பல கருத்துக்களை நீக்கக் கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். விசாரணை காவல் துறை அதிகாரியை வரவழைத்துவிசாரித்தது தவறு என்றும், அவர் தெரிவித்த கருத்து அடிப்படையில் ஜாமீன் மனு மீது நீதிபதி தீர்ப்பு வழங்கியதுசரியான அணுகுமுறை அல்ல என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு வியாழக்கிழமை உயர் நீதிமன்ற நீதிபதி மலைசுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்து.

நீதிபதி அசோக்குமாருடன், சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய விரிவான பதில் மனுவைதாக்கல் செய்தார்.

ஸ்டாலின் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

ஜாமீன் மனு மீது முதன்மை செஷன்சு நீதிபதி நடத்திய விசாரணை நியாயமானதுதான். இந்த வழக்கின்விசாரணைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக அவர் செயல்படவில்லை. புகார் மீது எடுக்கப்பட்ட தவறானநடவடிக்கைகள் பற்றித்தான் அவர் விசாரணை நடத்தினார்.

நீதிபதி தவறான நோக்கத்துடன் கேள்விகளை கேட்கவில்லை. விசாரணை போலீஸ் அதிகாரியை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி விசாரிக்க நீதிபதிக்கு உரிமை உண்டு.

குற்றவியல் நடைமுறைச்சட்டம் 311, இந்திய சாட்சிச் சட்டம் 165வது பிரிவின்கீழ் யாரையும் எந்த விசாரணைக்கட்டத்திலும் விசாரிக்க நீதிபதிக்கு உரிமை உண்டு. உண்மையை அறிவதற்காகவே நீதிபதி விசாரணை நடத்தினார்.உச்சநீதிமன்றம் கூறிய 4 பிரிவுகளின் கீழ் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வராது.

எந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் வழக்கு பதிவு செய்து எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று ஜாமீன் மனுமீதான விசாரணையின் போது நீதிபதி கேட்டு தெரிந்து கொள்ளவும் உரிமை உண்டு. எனவேதான், சி.பி.சி.ஐ.டிபோலீசார் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிபதி அசோக்குமார் கூறியுள்ளார்என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.

இந்த மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன்உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+