மேல்மருவத்தூர் விபத்து: சாவு எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

மேல்மருவத்தூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்வருத்தூர் அருகே லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பெண்கள்,3 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.


காஞ்சிபுரம் அருகேயுள்ள முத்தியால்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 65 பேர், திண்டிவனத்தை அடுத்துள்ளஎர்ணாவூர் என்ற ஊருக்கு வேனில் சென்றனர். அங்கு அவர்களது குல தெய்வத்தின் கோவில் உள்ளது. குலதெய்வத்தை வழிபட்டு விட்டு அனைவரும் மீண்டும் முத்தியால்பேட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சாலையில் வேன் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்புறத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரி வேன் மீது பயங்கரமாகமோதியது.

இதில் 2 வாகனங்களின் முன்புறமும் நொறுங்கின. இதில் வேனில் பயணம் செய்த 4 பெண்கள், ஒரு குழந்தைஉள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

படுகாயமடைந்து காஞ்சிபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியதர்ஷினி (ஒன்றரை வயது), பாரதி (3 வயது)ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட மேலும்2 பேரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

மேலும், இவ்விபத்தில் 26 பேர் காயமடைந்தனர். மருதுசாமி (20), எல்லப்பன் (45), மல்லிகா (35), சின்ராசு (7)மற்றும் சின்னப்பொண்ணு (11) ஆகியோர் சென்னை மருத்துவமனையில் கடுமையான காயங்களுடன் உயிருக்குப்போராடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தை காஞ்சிபுரம் எஸ்.பி மாசானத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்துபார்வையிட்டனர்.

விபத்து குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் ஆண்டவனைபிரார்த்தித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலாரூ.50,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15,000 ரூபாயும், சாதாரணகாயமடைந்தவர்களுக்கு ரூ.6,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியிருந்தார்.

சம்பவம் நடந்த இடத்தை மாநில அமைச்சர்கள் செம்மலை, திருநாவுக்கரசு, சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில்பார்வையிட விரைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+