ஐ.பி.எஸ். விவகாரம்: மத்திய அரசுக்கு தடை விதிக்க நடுவர் மன்றம் மறுப்பு
சென்னை:
முத்துக் கருப்பன் உள்ளிட்ட 3 தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப வேண்டும் என்றமத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என நிர்வாக நடுவர் மன்றம் (ட்ரிப்யூனல்)தீர்ப்பளித்துவிட்டது.
மத்திய அரசுப் பணிக்கு தங்களை மாற்றியதை எதிர்த்து சென்னை நகர போலீஸ் ஆணையர் முத்துக்கருப்பன்,இணை ஆணையர் ஜார்ஜ், துணை ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோர் மத்திய நிர்வாக டிரிப்யூனலில்தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:
கடந்த முறை மத்திய பணி வழங்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்து விட்டதால் முத்துக்கருப்பனுக்கு 5ஆண்டுகளுக்கு மத்திய பணியில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடை முடிய இன்னும் 2 ஆண்டுகள்உள்ளன. எனவே அவரை மீண்டும் மத்திய பணியில் சேர உத்தரவிட முடியாது.
ஜார்ஜ் இப்போதுதான் பணியில் சேர்ந்துள்ளார். எனவே உடனடியாக அவரை மத்திய பணியில் சேருமாறுஉத்தரவிட முடியாது.
கிறிஸ்டோபர் நெல்சனின் ஐ.பி.எஸ். அந்தஸ்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அவர் மத்தியபணிக்குச் செல்ல இன்னும் தகுதி பெறவில்லை. எனவே மத்திய அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்என்று அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, டிரிப்யூனல் தலைவர் நீதிபதி சுப்ரமணியம் மற்றும் உறுப்பினர் மாணிக்கவாசகம் ஆகியோர் அடங்கியபெஞ்ச்முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அவர்கள் அளித்த தீர்ப்பு விவரம்:
ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அமைச்சகப் பணிகளில் வந்து சேர்ந்து கொள்ளுமாறு மத்திய அரசுஅழைத்துள்ளது. இந்த உத்தரவை தடை செய்ய முடியாது.
ஆனால், இந்த வழக்கு சம்பந்தமாக, மத்திய-மாநில அரசுகள் தங்களுடைய பதில் மனுக்களை வரும் 27ம்தேதிக்குள் தாக்கல் செய்வதற்கு நோட்டீஸ் அனுப்புமாறு இந்த பெஞ்ச் உத்தரவிடுகிறது.
இதனால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று தீர்ப்பில் கூறியிருந்தார்நீதிபதி சுப்ரமணியம்.












Click it and Unblock the Notifications