பெண் சிசுக் கொலையைத் தடுக்க கோரிக்கை
டெல்லி:
பெண் சிசுக்கொலையைத் தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் டெல்லியில் நடந்த ஒருகருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய டி.எம்.சி யின் தலைவர் சவுத்ரி கூறியதாவது:
குழந்தை பிறக்கு முன்பே அதன் பாலினம் என்ன என்று கண்டறியும் தொழில் நுட்பத்தை மருத்துவநெறிமுறைகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இதன் மூலம், பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு, கருக்கலைப்புகள் அதிகரித்துவருகின்றன. இது, தற்போது ஒரு வியாபாரமாகவே மாறிவிட்டது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1901 ல், 1000 ஆண்களுக்கு , 972 பெண்கள் என்ற விகிதத்தில் இருந்தது.தற்போது, 2001 -ல் 1000 ஆண்களுக்கு 933 என்ற விகிதத்தில் குறைவாகவுள்ளது.
இந்த விகிதாச்சார மாறுபாடு டெல்லி, ஹரியானா, குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியமாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது. அதாவது இந்த மாநிலங்களில்தான் பெண்கள் குறைவான விகிதத்தில்உள்ளனர் என்றார் சவுத்ரி.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோகன்ராவ் கூறும்போது, குடும்பத்திற்கு 2 குழந்தைகள்போதுமானது என்ற கொள்கையும் இதற்கு ஒரு காரணம். இதனால் பெண் குழந்தைகள் கருவிலேயேகண்டறியப்பட்டு கலைக்கப்படுகின்றன என்றார்.
சுப்ரீம் கோர்ட் வக்கீல் முரளிதர் கூறியதாவது:
கருவில் வளரும் குழந்தை என்ன என்று பார்க்கும் தொழில்நுட்பம் குறித்து 1994 -ம் ஆண்டு ஒரு சட்டம்இயற்றப்பட்டது. அது 1996 -ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதில், பதிவு செய்யப்படாத சோதனை மையங்களும்,மருத்துவ மணைகளும் இயக்கப்டுவது குற்றம் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கருவில் வளரும் குழந்தைக்கு ஏதாவத ஆபத்து ஏற்படலாம் என்று கருதினாலோ, பாலின நோய்கள்ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தாலோ இந்த சோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்ளலாம் என்றுசட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இது மாதிரியான குற்றங்களைத் தடுக்கமுடியும் என்றார்முரளிதர்.
பத்திரிக்கையாளர் அனிதா ஆனந்த், இதுபற்றிய ஒரு சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் கருங்தரங்கில் கலந்துகொண்ட அனைவரும், இதுவரை சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்புக்கு உதவியமருத்துவர்கள் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு உடந்தையாக இருக்கும் மருத்துவர்களும்மண்டிக்கப்பட வேண்டும் என்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications