ஏமாற்றப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்
சென்னை:
அரசால் அங்கீகரிக்கப்படாத ஆசிரியர் பயிற்சி (டீச்சர் டிரைனிங்) பள்ளிகளில் கல்விபயின்ற 30,000 பேர் மீண்டும் 2 ஆண்டுகள் வேறு பள்ளிகளில் சேர்ந்து படித்தே ஆகவேண்டும் என்று தமிழக கல்வி அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
ரூ. 25,000லிருந்து ரூ. 1 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு இந்தக் கல்லூரிகள்ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்கின்றன. பிளஸ் டூ படித்த ஆயிரக்கணக்கானமாணவர்கள், குறிப்பாக மாணவிகள் டீச்சர் ஆகும் கனவுகளோடு இந்தக் கல்லூரிகளில்சேர்கின்றனர்.
ஆனால், கல்லூரி நடத்தவே அனுமதி பெறாமல் பல அரசியல் செல்வாக்குடைய பணமுதலைகள் கல்லூரிகளைத் தொடங்கிவிட்டு பணம் வசூலித்துக் கொண்டுமாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
கல்லூரியில் சேரும்போது யாரும் இந்தக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் உள்ளதாஎன்றெல்லாம் பார்ப்பதில்லை. சேர்ந்து 2 ஆண்டு படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ்கேட்கும்போது தான் இதயத்தில் உளியை இறக்குவார்கள் இந்தக் கல்லூரி முதலாளிகள்.
அரசு அங்கீகாரத்துக்கு அனுமதி கேட்டுள்ளோம், வந்தவுடன் தான் சான்றிதழ்கிடைக்கும் என்பார்கள்.
கனவுகள் சுமந்து கொண்டு, கடன் வாங்கி 2 ஆண்டுகள் படித்த பின்னர் கல்லூரிமுதலாளிகள் சொல்லும் இந்த அலட்சியமான பதில்களால் எத்தனையோ பேரின்வாழ்க்கை இடிந்து போய் இருக்கிறது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 30,000 பேர் இவ்வாறு உரிய அனுமதி பெறாத மோசடிகல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டுக் காத்திருக்கின்றனர். இவர்கள் அங்குபடித்ததற்கான சான்றிதழ் எதுவுமே கிடையாது. 2 ஆண்டுகள் கல்லூரிக்கு சென்றுவந்தது தான் மிச்சம்.
பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் பலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இதை விசாரித்த நீதிமன்றம், இந்த மாணவர்கள் மீண்டும் 2 ஆண்டுகள் அரசுஅங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தே ஆக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து இந்த மாணவர்கள் மீண்டும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சேரலாம்என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை அமைச்சர் தம்பிதுரை வியாழக்கிழமை சட்டசபையில்கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போது கூறியதாவது:
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி பெற்ற 28,366பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இவர்களும் மீண்டும் 2 ஆண்டுகாலம்பயிற்சி பெற வேண்டும்.
உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவின்படி அரசு அங்கீகாரம்பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்கள் அனைவரும் மீண்டும் 2 காலம்பயிற்சி பெற வேண்டும்.
அவர்களுக்கு குறைந்த கால பயிற்சி பெற வழி வகை எதுவும் இல்லை. எனவேஇவர்கள் அனைவரும் மீண்டும் 2 ஆண்டு பயிற்சி பெற வேண்டும். இது தொடர்பாகதேசிய ஆசிரியர் பயிற்சி அகாடமிக்கு தமிழக அரசு கடிதம் எழுதப்பட்டிருக்கிறதுஎன்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications