திருவாரூரில் மர்மத் தீ... திடீரென எரியும் வீடுகள்
திருவாரூர்:
கடந்த 2 மாத காலமாக திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் திடீர் திடீர் என வீடுகள் பற்றி எரிகின்றன.
ஒவ்வொரு வீட்டிலும் தீப்பற்றும் முன்னர் யாரே ஒரு ஆசாமி அந்த குறிப்பிட்ட வீட்டையோ அல்லது அருகில்உள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு பேசுகிறான். தீ வைக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு தான்தீயை வைத்துவிட்டுத் தப்பி விடுகிறான்.
இதுவரை இந்தப் பகுதிகளில் சுமார் 700 வீடுகள் முழுமையாக எரிந்துள்ளன. 200 வீடுகள் பாதி எரிந்த நிலையில்அணைக்கப்பட்டன. 4 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
ஆனால் தீயை பற்ற வைத்தது யாரென்றே தெரியாமல் இருந்து வருகிறது. போலீசாரும் இது பற்றி தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.
இருப்பினும் இதுவரை ஒருவர் கூட இது சம்பந்தமாகக் கைது செய்யப்படவில்லை. மர்ம ஆசாமியின் பெயரில்உள்ளூர்காரர்கள் தான் ஒருவர் மீது ஒருவருக்கு உள்ள பகையைத் தீர்த்துக் கொள்ள இவ்வாறு தீ வைத்துவருவதாகவும் கருதப்படுகிறது.
சட்டசபையில் பிரச்சனை:
இந்நிலையில் சனிக்கிழமை சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.அப்போது இந்த திடீர் தீ விவகாரம் கிளப்பப்பட்டது.
விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ புகழேந்தி பேசியதாவது,
கடந்த 2 மாத காலமாக திருவாரூர், தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் ஏற்பட்டுவரும் தீ விபத்தில் ஈடுபட்டகுற்றவாளிகளை பிடிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது,
திருவாரூர் பகுதிகளில் ஏற்பட்டு வரும் தீவிபத்துகள் குறித்து விசாரிக்கவும், மேலும் அப்பகுதியில் விபத்துகளைத்தடுக்கவும் பாதுகாப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதற்காக காவல்துறை ஐ.ஜியின் மேற்பார்வையில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காவல் துறையின் நுண்ணியல் பிரிவு இந்த சதி குறித்து புலனாய்வு செய்து வருகிறார்கள் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications