ராஜீவ் கொலை வழக்கு: 3 பேருக்கு எப்போது தூக்கு?

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு 18ம் தேதிதண்டனை நிறைவேற்றப்படுமா என்று சிறை அதிகாரியிடம் கேட்டபோது, தண்டனை தேதி வந்தவுடன்நிறைவற்றப்படும் என்று கூறினார்.

கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்கொலை படையைச் சேர்ந்த தணு என்றபெண், தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாள். இதில் ராஜீவ் காந்தி உள்ளிட்ட 16 பேர் உடல்சிதறி இறந்தனர்.

இந்த படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில், முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து, இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் கடந்த 1998ம் ஆண்டுதீர்ப்பளித்தது.

இவர்கள் அனைவரும் தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

இதையடுத்து, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையைஆயுள் தண்டனையாக குறைத்தும், நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்குதூக்கு தண்டனையை உறுதி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த 4 பேரும் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர். இது குறித்து மாநில அமைச்சரவை கூட்டத்தில்விவாதிக்கப்பட்டு, நளினி ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதால் அவரது தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஆளுநர் உத்தரவிட்டார்.இதையடுத்து இவர்கள் அனைவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மற்ற 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பினர். ஆனால், இதுவரை இது குறித்து ஜனாதிபதியிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை.

இது குறித்து, சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சிம்ரஞ்சித் சிங்மான் கூறுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர்என்ற முறையில் நான் மரண தண்டனையை எதிர்க்கிறேன். வரும் 18ம் தேதி தூக்கு தண்டனைநிறைவேற்றப்படும்போது, நான் சென்னையில் இருக்க விரும்புகிறேன். இதற்காக நான் வரும் 17ம் தேதி சென்னைசெல்கிறேன்" என்றார்.

இது குறித்து வேலூர் சிறை மத்திய சிறை அதிகாரியிடம் கேட்டபோது,

தூக்கு தண்டனை தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அரசிடமிருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.

தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்ட 7 நாட்கள் கழித்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். 8வது நாள் அரசுவிடுமுறையாக இருந்தால் 9வது நாள் தண்டனை நிறைவேற்றப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+