இந்தியக் கைதிகளை விடுவிக்க முஷாரப் புது முயற்சி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஜெயிலில் போர்க்கைதிகளாக இருப்பதாகச் சொல்லப்படும் இந்தியர்களை அடையாளம் காட்டஅவர்ளின் உறவினர்கள் பாகிஸ்தானுக்கு நேரில் வரலாம் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப்அறிவித்துள்ளார்.
அதன்படி இந்தியாவில் இருக்கம் பாகிஸ்தான் கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானிலிருந்தும் சில இந்தியப் போர்க்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் பாகிஸ்தானில் இருந்தகைதிகளில் இன்னும் 54 பேர் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் 1971ம் ஆண்டு நடந்தஇந்திய-பாகிஸ்தான் போரின் போது கைது செய்யப்பட்டவர்கள்.
இந்தியத் தரப்பிலும் இதுபற்றிப் பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அரசு, அங்குள்ளசிறைகளில் இந்தியப் போர்க்கைதிகள் யாரும் இல்லை எனவும், வேண்டுமானால் இது பற்றி நன்கு விசாரித்துத்தெரிவிப்பதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருப்பதாகக் கூறப்படும் இந்தியப் போர்க் கைதிகளின் உறவினர்களுக்கு முஷாரப்அழைப்பு விடுத்துள்ளார்.
"இந்தியப் போர்க்கைதிகள் எவரும் இங்கு இல்லை. ஆனால், அந்த கைதிகளின் உறவினர்கள் விரும்பினால்பாகிஸ்தானுக்கு வந்து சிறைத்துறை பதிவேடுகளைப் பார்த்து அடையாளம் காட்டலாம்" என்று பாகிஸ்தான் அதிபர்முஷாரப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இராணுவச் செய்தித் தொடர்பாளர் ரஷித் குரோஷி கூறியதாவது:
பாகிஸ்தானில் உள்ள 77 வெவ்வேறு சிறைகளில் அயல்நாட்டுக் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச்சிறைகளில் இந்தியக் கைதிகள் உள்ளனரா என்று வெளியுறவுத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.அவர்கள் இன்னும் 2 மாதத்தில் அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
இதற்கிடையில் இந்தியர்கள் விரும்பினால் இங்கு வந்து அடையாளம் காட்டலாம் என்றும் எங்கள் அதிபர் முஷாரப்அறிவித்துள்ளார்.
அவர்கள் பாகிஸ்தான் வருவதற்குத் தேவையான போக்குவரத்து ஆவணங்களை டெல்லியில் உள்ள பாக்.தூதரகத்தில் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications